முத்துப்பேட்டை அருகே தீ விபத்தில் 2 கூரை வீடு எரிந்து சாம்பல்முத்துப்பேட்டை  அருகே தீ விபத்தில் 2 கூரை வீடு சாம்பல்

  முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் காலனி சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாடிமுத்து. விவசாயி. இவரது வீடு அருகே அவரது மகன் முத்துராமன் வசித்து வருகிறார். நேற்று தீடீரென்று மின் கசிவின் காரணமாக இவர்களது கூரை வீடு தீபிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவி 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

எம்எல்ஏ ஆடலரசன் சென்று தீவிபத்தில் சேதமான வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்கள் வழங்கினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜாகிர் உசேன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.