மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக 2 முஸ்லீம் பெண்கள் மீது தாக்குதல் - தொடரும் காவி தீவிரவாதிகளி்ன் அராஜகம் வீடியோ



மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசூர் என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் மாட்டுக் கறியுடன் வந்த இரு முஸ்லீம் பெண்களை ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த போலீஸாரின் செயலும் கடும் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதை வேடிக்கை பார்த்த பொதுமக்களும் தடுக்க முயலாமல் செல்போனில் படம் எடுத்தபடி இருந்தனர்.

தாக்குதல் நடத்திய கும்பல் அந்தப் பெண்களை காலால் உதைத்தும், கையால் அடித்தும், கன்னத்தில் அறைந்தும் மோசமாக நடந்து கொண்டது. அந்த இரு பெண்களும் விற்பனை செய்வதற்காக 30 கிலோ மாட்டுக் கறியுடன் ரயிலில் வந்துள்ளனர். இதுகுறித்து போலீசாக்கு சிலர் பசு இறைசியுடன் வருவதாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்வதற்காக போலீசார் வந்தனர். அந்த சமயத்தில்தான் அப்பெண்கள் இருவரும் தாக்கப்பட்டனர்.

போலீஸார் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றபோதும் கூட அக்கும்பல் அப்பெண்களை தொடர்ந்து விடாமல் தாக்கிய வெறித்தனம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தாக்குதல் நடத்திய கும்பல் புனித கோமாதாவுக்கு ஜே என்று வாழ்த்தி கோஷமும் போட்டபடி தாக்கினர். அவர்கள் தாக்கியதில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த அராஜக தாக்குத் நடந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் இவர்கள் பசுவின் இறைச்சியைக் கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நாங்கள் அவர்களைக் கைது செய்து இறைச்சியைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினோம். சோதனையில் அது எருமை மாட்டின் இறைச்சி என்று தெரிய வந்துள்ளது என்றனர். இருப்பினும் இறைச்சி விற்பதற்கு அனுமதி இல்லாமல் விற்பனை செய்ய முயன்றதாக கூறி இரு பெண்கள் மீதும் போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனராம்.

இது குறித்த பிரச்சினையை மாயாவதி இன்று பாராளுமன்றத்தின் மாநிலங்கலவையில் எழுப்பினார் இதனால் அமளி ஏற்பட்டது அமளி ஏற்பட்டது.பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறிவைத்து தாக்கபடுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. காங்கிரஸ் மற்றும் பிறகட்சிகள் இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்ககோரி அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



Thanks To: Daily Thanthi
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.