3500 அடி மலை உச்சியின் பாறை சரிவில் காரை நிறுத்திய சவூதி இளைஞர் !பொதுவாக சவூதி விமான பைலட்டுகள் உலகிலேயே துணிச்சல் மிக்க விமானிகளாக அறியப்படுகின்றனர். அதுபோல் பல சவூதி இளைஞர்களும் தங்களுடைய வாகனங்களை கொண்டு பல அசட்டுத் துணிச்சல் சாகசங்களில் ஈடுபடக் கூடியவர்' என்பது பரவலாக அறியப்பட்டதே. இப்படி சாகசம், துணிச்சல் என்ற பெயரில் உயிரோடு விளையாடும் இளைஞர்கள் பிடிபட்டால் ஜெயில் தண்டனை அல்லது கட்டாய ராணுவ சேவையில் தள்ளப்படுவார்கள்.

அதிலும் இன்றைய காலம் நயாப் பைசாவுக்கும் புண்ணியமில்லாத 'சோஷியல் மீடியா லைக்குகளுக்கு' அலையும் காலமிது. அதன் படி சவூதி இளைஞர் ஒருவர் 3500 அடி உயர ஒருவர் ஃபிபா மலையுச்சியின் சரிவான பாறையில் கொண்டு போய் தன்னுடைய காரை நிறுத்தி புகைப்படம் எடுத்து சோஷியல மீடியாக்களில் வெளியிட, அவர் எதிர்பார்த்த லைக்குகளும் ஷேர்களுமாக அந்தப்படம் பகிரப்பட்டு வருகிறது.

நீங்களும் இந்த படத்தை பார்த்து உங்களின் குதிகால்கள் ஜில்லிட்டால்... என் இனமய்யா நீ.

Source: Khaleej Times
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.