முத்துப்பேட்டை அருகே 3 நாட்களாக நிற்கும் மர்ம கார்
முத்துப்பேட்டை அருகே 3 நாட்களாக நிற்கும் மர்ம கார்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த கோபாலசமுத்திரம் பாலம் அருகே சண்முகம் என்பவரது டீக்கடை வாசலில் கடந்த மூன்று தினங்களாக சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று நிற்கிறது.

அது யாருடைய கார்? எதற்க்காக இங்கே நிறுத்தப்பட்டது? கார் பழுது அடைந்ததா? அல்லது திருடப்பட்ட காரா? அல்லது குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட காரா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்தள்ளது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

இந்தநிலையில் காரை கொண்டு வந்து நிறுத்திய நபர் சுமார் 28 வயதுக்குட்பட்டவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் சிகப்பு கலர் டி சர்ட் மற்றும் பேன்ட் அணிந்து வந்துள்ளார். அவர் டி சர்ட்டை கழட்டிவிட்டு கட்டம் போட்ட சர்ட் அணிந்துள்ளார், அப்பொழுது சண்முகம் டீ கடையில் செல்போனுக்கு சார்ஜர் போட்டதாகவும், அந்த நபர் கார் ரிப்பேர் ஆகிவிட்டது. அதனை வந்து எடுத்துகொள்வதாக கூறியதாகவும் சண்முகம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த மர்ம கார் குறித்து காட்டுத்தீ போல் தகவல் பரவியதால் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.