மணிப்பூரில் சிறையில் மோதல்: இரண்டு சவூதி அரேபிய கைதிகள் உட்பட 3 பேர் பலி.!மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் உள்ள மத்திய சிறையில் கைதிகளுக்குள் திடீரென மோதல் வெடித்தது. இந்த சண்டையில் கைதிகள் ஒருவொருக்கருவர் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இந்த மோதலில் யூசூப்( வயது 21), அப்துஸ் சலாம் (22) என்ற இரண்டு சவூதி அரேபிய நாட்டு கைதிகள் மற்றும் மணிப்பூரை சேர்ந்த கைதி தங்மின்லயன் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

மேலும்,மோதலை கட்டுப்படுத்த முயன்ற சிறை அதிகாரி உட்பட 4 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்த மூவரின் உடலும் பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைக்காக இறந்த சவூதி அரேபிய கைதிகளின் விபரத்தை சிறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

சவூதி அரேபிய நாட்டு கைதிகள் பேசும் மொழி பிற கைதிகள் யாருக்கும் தெரியாது என்று கூறப்படுகிறது. இந்த திடீர் மோதலுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.