முத்துப்பேட்டை பேரூராட்சியில் 5 வருடமாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பணிகள் பாதிப்பு மக்கள் கடும் அவதிமுத்துப்பேட்டை பேரூராட்சியில் கடந்த 5 வருடமாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால், பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இங்கு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சி அலுவலகத்தில் 14 நிரந்தர பணியாளர்கள், 4 தற்காலிக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். துப்புரவு பணிக்காக 16 நிரந்தர துப்புரவு பணியாளர்கள், 24 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்த பேரூராட்சியில் செயல் அலுவலர் நிரந்தரமாகவும்,  நீண்ட நாட்களும் பணியாற்றியது கிடையாது. சமீபத்தில் இங்கு பணியாற்றிய செயல் அலுவலர் நாகராஜ் மர்மமான முறையில் இறந்தார். ஒரு செயல் அலுவலர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அதே போல் இந்த பேரூராட்சிக்கு வரும் பல செயல் அலுவலர்கள் உடல் நலக்குறைவு, விபத்துகளால் பாதிப்பு மற்றும் மனஅழுத்தம் போன்றவைகளால் உயர் அதிகாரிகளை பார்த்து இடம் மாற்றம் பெற்று சென்று விடுகின்றனர். அதனால் முத்துப்பேட்டை பேரூராட்சியில் செயல் அலுவலர் பதவி அடிக்கடி
காலி இடமாக உள்ளது.

இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன், செயல் அலுவலராக  குலோத்துங்கன் பொறுப்பேற்றார். அவர் வந்த நாளிலிருந்து இங்கு பணியாற்றி சென்ற மற்ற அலுவலர்கள் போல் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்தார். பின்னர் அவரும் இடமாற்றம் பெற்று சென்று விட்டார் இந்தநிலையில் பேரளம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்  பொறுப்பு
அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

அவரும் சரிவர அலுவலகத்திற்கு வருவது கிடையாது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இைதயடுத்து இரு  வாரத்திற்கு முன்  நிரந்தர செயல் அலுவலராக ஸ்ரீதர் என்பவர் நியமனம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அவரும் இன்னும் பொறுப்பு ஏற்க்க வராததால் பேரூராட்சி அலுவலகத்தில் பல்வேறு பணிகள் முடங்கி உள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றுதழ்களை மக்கள் பெற முடியவில்லை. இந்த பிரிவில் பணியாற்றும் தற்காலிக பெண் பணியாளர்கள்  பொது மக்களிடம் சரிவர பதில் கூறுவது கிடையாது.

அதேபோல் மக்களின் அன்றாட அடிப்படை வசதிகள் கூட பேரூராட்சி நிர்வாகத்தால் செய்து கொடுக்க முடியவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுநீர்  தேங்கி அசுத்தமாக காட்சி அளிக்கிறது. பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தெருவிளக்குகள் பராமரிக்கப்படாததால் இரவில் பல பகுதிகள் இருண்டு காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தால் அலுவலர்கள் செயல் அலுவலர் இல்லை என்ற பதிலை தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் பேரூராட்சி நிர்வாகம் செயல் இழந்து உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Thanks To; Dinakaran

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.