கூத்தாநல்லூர் அருகே பேஸ்புக்கில் அவமானப்படுத்தியதால் பெண் தற்கொலை முயற்சி; 7 இந்து காமுகர்கள் கைது
கூத்தாநல்லூர் அருகே பேஸ்புக்கில் அவமானப்படுத்தியதால் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்

தற்கொலை முயற்சி 
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள அகரபொதக்குடியை சேர்ந்தவர் தர்மராஜன். இவருடைய மனைவி சரிதா (வயது28). சம்பவத்தன்று அவரை பற்றி அதே பகுதியை சேர்ந்த சிலர் பேஸ்புக்கில் தவறான தகவலை வெளியிட்டனர். இதனை பேஸ்புக்கில் பார்த்த சரிதா மனம் உடைந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவருடைய உறவினர்கள், சரிதாவை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

7 பேர் கைது இதுகுறித்து சரிதா கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ்நெப்போலியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சரிதாவை பற்றி தவறான தகவல்களை பேஸ்புக்கில் வெளியிட்ட அகரபொதக்குடியை சேர்ந்த மருதமுத்து(56), யுவராஜா(24), கோபிராஜ்(31), ரகுராம்(30), நடராஜன்(45), கோபிநாதன்(32), பாண்டி(27) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் 7 பேரும் மன்னார்குடி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.