மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் செய்த 70 பேர் கைது: ராம்குமாருக்கு ஆதரவாக செயல்படும் சாதி அமைப்புகளை கண்டித்து!!!சென்னை பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாருக்கு ஆதரவாக செயல்படும் சாதி அமைப்புகளை கண்டித்து மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் செய்த 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
சென்னை பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாருக்கு சாதி அமைப்புகள் மற்றும் அரசியல் அமைப்புகள் ஆதரவாக செயல்படுவதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் முக்குலத்து புலிகள் அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முக்குலத்து புலிகள் அமைப்பு நிறுவனர் ஆறு.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் தனியரசு, நகர பொறுப்பாளர் அன்பானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர இணைச்செயலாளர் பிரபு, இளைஞரணி செயலாளர் அபினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு உரிய அனுமதி போலீசாரிடம் பெறவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முக்குலத்து புலிகள் அமைப்பு நிறுவனர் ஆறு.சரவணன் உள்பட 70 பேரை மன்னார்குடி போலீசார் கைது செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.