பட்டுக்கோட்டை பகுதியில் திருடுப் போன 70 பவுன் நகைகள் மீட்பு !பட்டுக்கோட்டை காவல் துணைக் கோட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களில் திருடுப் போன 70 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டை பகுதியில் அண்மைக்காலமாக நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தன. நகை திருடர்களைப் பிடிக்க பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு, உதவி ஆய்வாளர் மதன்ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கொண்டிக்குளம் கிராமத்தில் நின்ற 5 பேரை தனிப்படை போலீஸார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் பட்டுக்கோட்டை அண்ணாநகர் க. ராஜேந்திரன் (56), அவர் மகன் மணிகண்டன் (26), இவர்களின் உறவினர்கள் கொண்டிக்குளம் சர்க்கார் தோப்பு பகுதியைச் சேர்ந்த மு. மூர்த்தி (28), கா. முருகன் (24), சிவகங்கை மஜீத் தெருவைச் சேர்ந்த சு. பிரபாகரன் (25) என்பதும், இவர்கள்தான் கடந்த சில மாதங்களாக பட்டுக்கோட்டை  நகரில் 6 இடத்திலும், பட்டுக்கோட்டை தாலுகா பகுதியில் 5 இடத்திலும், திருச்சிற்றம்பலம் பகுதியில் 4 இடத்திலும், சேதுபாவாசத்திரம் பகுதியில் 5 இடத்திலும்,  பேராவூரணியில் ஒரு இடத்திலும் என மொத்தம் 21 இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து 70 பவுன் நகைகளைத் திருடியது தெரியவந்தது.

போலீஸார் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 70 பவுன் நகைகளை மீட்டனர்.

நன்றி: தினமணி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.