முத்துப்பேட்டையில் கடைகளில் வேலைபார்த்த 7 குழந்தை தொழிலாளர் மீட்புதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடைகளில் வேலைபார்த்த 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக திருவாரூர் சைல்டுலைனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் மாரிதாஸ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இளமாறன், சுந்தரமூர்த்தி, அன்பழகன், தலைமை காவலர்கள் நடராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் முத்துப்பேட்டை பகுதியில் வெல்டிங் ஒர்க்ஸ் மற்றும் பூக்கடை உட்பட பல்வேறு கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு தனியார் வெல்டிங் கடை மற்றும் பூக்கடைகளில்  வேலை பார்த்துக்கொண்டு இருந்த முத்துப்பேட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுதாகர்(18), பூமிநாதன் மகன் சதீஸ்(18), செருகளத்தூர் கண்ணன் மகன் தென்னரசு(14), வண்டல்வெளி இளங்கோ மகன் பார்த்திபன்(17), கோவிலூர் மணல்மேடு நல்லமுத்து மகன் அழகு தம்பி(18), செம்படவன்காடு வைத்திலிங்கம் மகன் கனகராஜன்(17), மரைக்காகரை பால்ராஜ் மகன் ஜெயராஜ்(17) ஆகிய 7 குழந்தை தொழிலாளர்களை மீட்டு முத்துப்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை வழங்கி 7 பேரையும் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.