மன்னார்குடியில் கொத்தடிமையாக விற்கப்பட்ட சிறுவன் உள்பட 8 பேர் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கைதிருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் தலைமையில் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காமாட்சி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் லெட்சுமணன், ஸ்ரீதர், ஆனந்தராஜ், ரவி, திருவாரூர் சைல்டு லைன் அலுவலர் பிரகலாதன் ஆகியோர் மன்னார்குடி, நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மன்னார்குடியில் பூக்கடை உள்பட பல்வேறு கடைகளில் 7 சிறுவர்கள் பணியில் இருப்பது கண்டறிப்பட்டது. உடனே அவர்கள் அந்த 7 குழந்தை தொழிலாளர்களையும் மீட்டனர். அதேபோல மன்னார்குடியில் ஒரு சிறுவன் ஆடுமேய்த்து கொண்டு இருந்தான். அந்த சிறுவனையும் அவர்கள் மீட்டு அவனிடம் விசாரணை நடத்தினர். அதில் அவனது சொந்த ஊர் ராமநாதபுரம் என்பதும், அவரது பெற்றோர் ரூ.30 ஆயிரத்திற்கு கொத்தடிமையாக விற்றதும் தெரியவந்தது. மீட்கப்பட்ட 8 சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்த
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.