குவைத்தில் 8,000 தொழிலாளர்கள் போராட்டம் - 3 மாதங்களாக ஊதியம் வழங்காததால் தவிப்புதமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து குவைத்திற்கு வேலைக்குச் சென்ற 8,000 தொழிலாளர்கள் மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து தொடர்ந்து 11வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றினர். குவைத்தில் உள்ள கராஃபி நேஷனல் என்ற எரிவாயு நிறுவனத்தில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 8,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் கேட்டு இவர்கள் நடத்தும் உள்ளிருப்பு போராட்டம் 11வது நாளாக நீடிக்கிறது.

கேரள மாநில எம்.பி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதை போல தமிழக அரசும் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என ஊழியர்கள் கோரியுள்ளனர். கராஃபி நேஷனல் என்பது குவைத் நாட்டில் பல்வேறு தொழில்களை மேற்கொள்ளும் மிகப் பொயி குழுமம் ஆகும். இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சர்வதேச சந்தைளில் கச்சா எண்ணெயின் விலை கடந்த சில மாதங்களாக சரிந்து விட்டது. இதனால் வளைகுடா நாடுகளில் நிலவும் பொருளாதார தேக்க நிலையே ஊதியம் வழங்கப்படாததற்கு காரணமாகவும் கூறப்படுகிறது.  

Thnks To: Dinakaran   21.07.2016

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.