முத்துப்பேட்டை 9வது வார்டில் மேடு, பள்ளமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி: கண்டுகொள்ளாத அதிகாரிகள்முத்துப்பேட்டை 9வது வார்டு பகுதியில் சாலை கரடு முரடாக சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு பகுதியில் உள்ள பக்கிரி தெரு, நடுத்தெரு, முகைதீன் பள்ளி சந்து பிரியும் தெருவில் மேடு, பள்ளமாகவும், சிமென்ட் பிலாட்டுகள் சரியாக பதியப்படாமலும் சாலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் நடக்கக்கூட முடியாத அளவுக்கு சாலை மோசமாக உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சிலர் ஆக்கிரமித்து படிகள் கட்டி இருப்பதால் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம், கவுன்சிலரிடம் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகி ஹாஸ்பாவா கூறுகையில், பல ஆண்டுகளாக இந்த சாலை மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் சென்று வரவும், வாகனங்கள் செல்லவும் சிரமமாக உள்ளது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினமும் தடுமாறி விழுந்து பாதிக்கப்படுகின்றனர். நானும் இப்பகுதி மக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இனியும் காலதாமதப்படுத்தினால் தெருமக்கள் எல்லோரும் சேர்ந்து பேரூராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடுத்துவோம் என்றார்.

Thanks To: Thina Karan
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.