அதிரை மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய லாரல் பள்ளி ஆசிரியர்!ள்ளிக்கொண்டான் பகுதியில் அமைந்துள்ள பிரபல லாரல் பள்ளி ஆசிரியர் ஒருவர் அதிரையை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனை வெறித்தனமாக தாக்கியுள்ளார்.
அதிரையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் லாரல் பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற ஹக்கீம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவனை அங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் வீட்டு பாடம் செய்து வரவில்லை என கூறி பிரம்பினால் பலமாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மாணவன் சம்பவம் குறித்து வீட்டில் சொல்லாமல் மறைத்து வந்துள்ளான். 
இதுகுறித்து நாம் விசாரித்த வகையில் சம்பவத்தன்று மாணவன் பள்ளியில் கூறிய அனைத்து பாடங்களின் வீட்டு பாடத்தையும் செய்துள்ளார். ஆனால் பள்ளி ஆசிரியர் தனது பாடத்திற்கான வீட்டு பாடம் குறித்து மாணவர்களிடம் கூறாமல் தனியாக ஒரு மாணவனிடம் மட்டும் கூறியுள்ளார். இதனால் பிற மாணவர்களுக்கு வீட்டு பாடம் குறித்த தகவல் கிடைக்கவில்லை எனவே இவர்கள் தங்களுக்கு தெரிந்த வீட்டு பாடத்தை மட்டும் செய்துவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். இதனை முறையாக ஆசிரியர் அறிந்தும் வேண்டுமென்றே 25திற்கும் மேற்பட்ட 9ம் வகுப்பு மாணவர்களை அவர் கொடுரமான முறையில் தாக்கி காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் இதே ஆசிரியர் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் பள்ளிக்கு மாற்று சான்றிதழ் வாங்க சென்ற அதிரை மாணவனின் உறவினர் ஒருவரை கீழே தள்ளி அவமானம் படுத்தியது குறிப்பிடத்தக்கது. எனவே சம்பந்தபட்ட ஆசிரியரை உடனே பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் என பலரும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.