இந்தியர்கள் சவூதியில் வேலை இழந்து தவிக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண முடிவு
சவூதி அரேபியாவில் ஏராளமான இந்தியர்கள் வேலை இழந்து தவித்து வரும் பிரச்சினைக்கு தீர்வு அமைச்சர் வி.கே.சிங் அங்கு செல்கிறார்.
சவூதி அரேபியா மற்றும் குவைத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் விளைவாக அங்கு பணியாற்றிய இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர்.
மிக அதிக அளவிலான இந்தியர்கள் வேலை இழந்து தவித்துவரும் நிலையில் அவர்களுக்கு சம்பள பாக்கியும் வழங்கப்படவில்லை.
இது தொடர்பான தகவல்களைத் டுவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சகோதர, சகோதரிகள் அங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ரியாத்தில் உள்ள இந்திய தூதகரத்தை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு ரேசன் முறையில் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சவூதி அரேபியா செல்ல உள்ளதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.