மாட்டிறைச்சியின் பெயரால் முஸ்லிம்கள் மீது தாக்குதல்... மாயாவதி கடும் எச்சரிக்கை..! வீடியோ



மத்திய பிரதேசத்தில் ரயில்வே நிலையம் ஒன்றில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இரண்டு இஸ்லாமிய பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மத்திய பிரதேசத்தில் மண்ட்சவுர் ரயில்வே நிலையத்தில் இரண்டு இஸ்லாமிய பெண்கள் மாட்டிறைச்சி எடுத்து செல்வதாக கூறி அவர்கள் மீது 'இந்து தள்' என்ற அமைப்பை சேர்ந்த பெண்கள் கடுமையாக தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார்.
இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் வைத்திருந்தது எருமை இறைச்சி தான் என மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் புபீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.