ஷீஆக்களின் வழிகெட்ட கொள்கைகள்
இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்தின் மூலம் ஜாஹிலிய்யா சமூகத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே சமுதாயமாக மாற்றியமைத்தார்கள். அதற்கு முன்னர் அவர்கள் குலத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் சிதரிக்கிடந்தனர். இவர்கள் போன்று சண்டையிட்டுப் பிரிந்த சமுதாயம் உலகில் யாரும் இருக்கவில்லை. இஸ்லாத்தின் ஒளிக்கீற்று அவர்களின் வாழ்வில் பட்ட பின்னர் உலக வரலாற்றில் அந்த சமுதாயத்தில் காணப்பட்ட ஒற்றுமை போன்று ஒரு போதும் காணப்பட்டதில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின்னர் இந்த ஒற்றுமையைக் குலைப்பதை இலட்சியமாகக் கொண்டவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முதலில் பலியானவர்கள் ஷீஆக்களும் காரிஜியாக்களுமாவர். இந்த இரு பிரிவினரும் இஸ்லாத்திற்கு கேடு விளைவித்த அளவுக்கு வேறு எந்தப் பிரிவினரும் கேடு விளைவித்ததில்லை.
இப்பிரிவுகள் தோன்றுவதற்கு தனியொரு நபர் மீது கொண்ட விருப்பு வெறுப்பு என்பனவே காரணங்களாக அமைந்தன. அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது வெறுப்பு எல்லை மீறிப் போனதால் காரிஜிய்யா என்ற பிரிவு தோன்றியது.
அரசியல் காரணங்களுக்காக அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களை எதிர்க்க ஆரம்பித்த இந்தக் கும்பல் அல்லாஹ்வின் தூதர் பெயரால் பொய்களைப் பரப்பி அல்குர்ஆனுக்கு தவறான விளக்கம் கூறி கிளர்ச்சி செய்தனர்.
இதேபோல் இவர்களுக்கு எதிராக அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களை ஆதரிக்க முன்வந்த கூட்டமே ‘ஷீஆ’ شيعة எனப்படுகின்றனர். இவர்கள் தான் இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக ‘ஷீஅத்து அலி’ என்று அழைக்கப்பட்டனர். ‘ஷீஆ’ شيعة என்ற சொல் கட்சி குழு என்ற கருத்தைத் தருகிறது.
அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அரசியல் தலைமைக்கு ஆதரவாக வளர்ந்த இப்பிரிவினர் நாளடைவில் அவர்களை அவதார புருஷராகவும் தெய்வீக அம்சம் பொருந்தியவராகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட உயர்வானவராகவும் கருதலானார்கள்.

இந்த வெறி முற்றிப்போன போது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு போன்ற உன்னத ஸஹாபாக்களை இழிவுபடுத்த ஆரம்பித்தனர்.
இன்று இவர்கள் பல பிரிவுகளாக பல கொள்கைகளுடன் உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். ஈரானில் அவர்களின் ஆட்சியே உள்ளது. ஷீஆக்கள் இந்நாட்டில் நுழைவதற்கு சிலர் இன்று வழி அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்லாத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறிவிட்ட ‘ஷீஆக்கள்’ தான் உண்மை முஸ்லிம்கள் என்ற பிரசாரம் கூட சில இயக்கவாதிகளால் முடுக்கி விடப்பட்டுள்ளது.
[1980களுக்கு முன்னர், இந்த நாட்டில் அபு+பக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) போன்றவர்களைக் 'காபிர்” என்று திட்டுபவர்கள் இருக்கவில்லை. ஆனால், இப்போது உருவாக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையைத் தோற்றுவித்தவர்கள் யார்? நவீன கிலாபத்தின் காவலர்கள். இந்த நாட்டில் ஸஹாபாக்களைத் திட்டும் கூட்டத்தை உருவாக்கிய அநியாயத்திற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். நிச்சயமாக அல்லாஹ் இதுபற்றியும் கேட்காமல் விடமாட்டான்.]
ஏகத்துவக் கொள்கையைத் தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கும் அனைத்து துறைக்கும் வழிகாட்டும் இயக்கங்கள் என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு ‘ஷீஆப்’ புரட்சியாகிய ஈரானியப் புரட்சிக்கு இஸ்லாமிய சாயம் பூசிக்கொண்டிருக்கின்றன இந்த இயக்கங்கள். எனவே ஷீஆக்கள் என்றால் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? என்பனவற்றை சுருக்கமாக இங்கு நோக்குவோம்.

அஷ்ஷீஆ : الشيعة

இப்பெயருக்குள் அனைத்து உட்பிரிவுகளும் அடங்கிவிடும். இதுவே மிகப் பிரபல்யமான பெயர்.

பிரதான பிரிவுகள்:

ஷீஆ இயக்கத்திற்குள் கிட்டத்தட்ட 70 திற்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவற்றில் பிரதான நான்கு பிரிவுகள் உள்ளன.
அஸ்ஸபயிய்யா
அஸ்ஸைதிய்யா
அல்கைஸானிய்யா
அர்ராபிழா
அஸ்ஸபயிய்யா:
இவர்கள் அப்துல்லாஹ் பின் சபா எனும் யூதனைப் பின்பற்றுவோர். இவர்கள் அலி (ரழி) மரணிக்கவில்லை என்றும் அவர்கள் மேகத்தில் இருப்பதாகவும் இடி அவரின் ஓசை மின்னல் அவரின் பார்வை என்றும் இறுதிகாலத்தில் மீண்டும் வந்து நீதத்தால் பூமியை நிரப்புவார் என்றும் நம்புகின்றனர். இது ‘அர்ரஜ்இய்யா’ வாகும். (அல் மிலல் வன்னிஹல் பாகம் 1 பக்கம் 146)

உட்பிரிவுகள்
அல்குராபிய்யா (காகம்): الغرابية

அலி ரளியல்லாஹு அன்ஹு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகிய இருவரும் உருவ அமைப்பில் ஒன்று என்றும்இ ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வஹியை மாற்றிவிட்டார் என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை திட்டும் – சபிக்கும் கூட்டம் (அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 250)

அன்னமிரிய்யா:

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அலி பாதிமா ஹஸன் ஹுஸைன் ஆகிய ஐவரில் அல்லாஹ் குடிகொண்டிருப்பதாக நம்புகின்றனர். இக்குழுவின் தலைவன் தன்மீதும் அல்லாஹ் இறங்கியுள்ளதாகவும் கூறினான். (அல்பர்க் பைனல் பிரக் பக்கம் 252)
அஸ்ஸபயிய்யா என்ற பெயரில் அழைக்கப்படும் இக்குழு யூதன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் பித்தர்களே. இவன் தன்னை முஸ்லிமாகக் காட்டிக்கொள்ள நடித்தான்.
இவன் மூலமாகவே ஷீஆக் கொள்கை உருவானது என்பதை

1. தாரீகுத் தபரி
2. அல்பிதாயா வன்னிஹாயா

3. மீஸானுல் இஃதிதால்

4. லிஸானுல் மீஸான்
5. தாரீகு இப்னு கல்தூன் போன்ற நூல்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றமான ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ‘ஷீஆ’ இயக்கம் உருவாவதற்கு பாரசீகப் பகுதியில் காணப்பட்ட சிந்தனைகளே காரணம் என பல ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாரசீக மக்கள் மன்னர் ஆட்சி முறைக்கு பழக்கப்பட்டவர்கள். அதனால் அவர்களுக்கு வாரிசுரிமை ரீதியிலான தலைமைத்துவமே பரிச்சியமாக இருந்தது.
தகுதியான ஒரு தலைமையைத் தேர்வு செய்யும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே வாரிசுரிமை அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசியலும் அவர்கள் நோக்கினர். ஆகவே தான் ‘ஷீஆ’ இயக்கம் பாரசீக சிந்தனைத் தாக்கத்தினால் வளர்ச்சியுற்றது என சில ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

அஸ்ஸைதிய்யா: الزيدية

அலி → ஹுஸைன் → ஸைனுல் ஆப்தீன் → ஸெய்த். இதில் ஸெய்த் அவர்களை பின்பற்றுபவர்களே ஸெய்திக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஸெய்த் அவர்கள் ஹிஜ்ரி 80 ல் பிறந்தார். ஹிஜ்ரி 122 ல் கொல்லப்பட்டார். இவரிடம் மிதவாத சிந்தனைப் போக்குக் காணப்பட்டது. அதனால் மக்களால் நேசிக்கப்பட்டார். அறிவு ஆற்றல் ஆளுமை நற்பண்புகள் என்பனவுடையவராகத் திகழ்ந்தார்.
இமாம் ஹஸனுல் பஸரியின் மாணவனான இவர் முஃதஸிலா இயக்க ஸ்தாபக முன்னோடியான வாஸில் பின் அதா அபூ ஹனீபா போன்றோரிடமும் கற்றுள்ளார். இதனால் இக்குழுவினர் அடிப்படை விடயங்களில் முஃதஸிலாக் கொள்கையுடையோராகவும் கிளை விடயங்களில் ஹனபிய்யாக்களாகவும் கருதப்படுகின்றனர்.
ஸெய்த் அவர்கள் உமைய்யா ஆட்சியை எதிர்த்து மேற்கொண்ட போரில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை கர்பலாவில் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது கொலை ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்ற மிகப் பெரும் அனுதாப உணர்வலைகளை ஏற்படுத்தி இக்கொள்கையை வளர்ச்சியுரச் செய்தது.
உட்பிரிவுகள்:
ஸெய்திய்யாக் குழு உருப்பினரான அபூ ஸஹ்ரா என்பவர் இக்குழுவை கொள்கை அடிப்படையில் இரண்டாக வகுத்து நோக்குகின்றார்.
மூத்தோர்கள்: இமாமத் தகுதி அடிப்படையில் வரலாம். எனவே அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரின் ஆட்சியை அங்கீகரிக்கின்றனர். இவர்கள் தற்போது எமன் நாட்டில் கருத்து முரண்பாடுகளினால் பிளவுபட்டு ஸுலைமானிய்யா ஜாரூதிய்யா ஸாலிஹிய்யா போன்ற முப்பிரிவுகளாக வாழ்ந்து வருகின்றனர். (அல்மிலல் வந்நிஹல் பாகம் 1, பக்கம் 155)
பிந்தியோர்கள்: இவர்கள் முன்னைய மூன்று நல்லாட்சி நடாத்திய கலீபாக்களையும் அவர்களது ஆட்சியை ஆதரிப்போரையும் ‘காஃபிர்’கள் என்கின்றனர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.