இந்த ஒரு நபி மொழியை நாம் சரியாக விளங்கிக் கொண்டால் பல பிரச்னைகளுக்குத் தீர்வைக் காணலாம்.
இறைவனின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது?' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் 'உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள். அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும்' என்றார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூதர்
ஆதார நூல்கள் புகாரி 2518, முஸ்லிம் 119

இந்த ஒரு நபி மொழியை நாம் சரியாக விளங்கிக் கொண்டால் பல பிரச்னைகளுக்குத் தீர்வைக் காணலாம். இன்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களில் 80 சதமான பேர் உண்மையான இஸ்லாம் என்ன என்பதை விளங்காமல் பல பிரச்னைகளை தங்களுக்கும் தம்மைச் சார்ந்த சமூகத்துக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் அவர்கள் 'இவை எல்லாம் எங்களை சொர்க்கத்துக்கு கொண்டு சென்று விட்டு விடும்' என்று வேறு சொல்கிறார்கள்..

மேலே உள்ள நபி மொழியில் சில நல்லறங்களை நான் செய்யாமல் போனால் என்ன செய்வது என்ற கேள்விக்கு, மனிதர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் என்ற பதிலை நாம் பார்க்கிறோம். ஷியாக்களுக்கும் சுன்னத் ஜமாத்துக்கும் பகை: இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகை: கிறித்தவர்களுக்கும், பவுத்தர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பகை: தவ்ஹீத் வாதிகளுக்கும் தர்ஹா வணங்கிகளுக்கும் பகை: என்று எங்கு நோக்கினாலும் பிரச்னைகளே!

முஸ்லிம்களை அழித்து அதன் மூலம் தாங்கள் மோட்சம் அடைந்து விடலாம் என்பது பெரும் பாலான இந்துத்வாவாதிகளின் நம்பிக்கை. இதற்கு அவர்களின் வேதங்களே தடையாக இருப்பதை ஏனோ இவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை: முதலில் சக மனிதனை நிம்மதியாக வாழ வைத்தால்தான் நீ இறைவனை நெருங்க முடியும் என்று உலக மதங்கள் அனைத்துமே கூறுகிறது. ஆனால் மனித மனம் இதனை சிந்திப்பதில்லை. தலைவர்கள், இயக்கங்கள், குழுக்கள் என்ற பெயரில் அவரவர்க்கு தோதான வசனங்களை பிடித்துக் கொண்டு தினமும் ரத்தத்தை சிந்திக் கொண்டிருக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே! இவர்கள் நல்லது செய்யா விட்டாலும் சும்மா இருந்தாலே போதும்: பல பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடும். அதாவது உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாமில்லையா?

சக மனிதர்களை அன்போடும் பாசத்தோடும் நோக்குங்கள்: இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ யாராக இருந்தாலும் அவனும் ஆதமின் மகனே! அந்த பாசம் வந்து விட்டால் முறுகல் விலகும்: அன்பு பெருகும்: மனிதம் தழைக்கும்:
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.