முத்துப்பேட்டையில் முஸ்லீம் பிரமுகர் இறந்ததற்கு இறங்கல் தெரிவித்து போர்டு வைத்த இந்துக்கள்.பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டையில் முஸ்லீம் பிரமுகர் இறந்ததற்கு ஒற்றுமையான வாசகங்களுடன் இறங்கல் தெரிவித்து போர்டு வைத்த இந்துக்கள்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பதற்றம் நிறைந்த ஒரு பகுதியாகும். இங்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லீம் மதத்தினருக்கும் மற்றொரு சமுதாயத்திற்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடிக்கும். இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை கிராமத்தில் அதிகளவில் இந்துக்கள் அதிகமாக வசித்து வந்தாலும் முஸ்லிம்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இங்கு முஸ்லிம் ஜமாத் தலைவராக இருந்தவர் நைனாமுகமது. நேற்று அதிகாலை திடீரென்று உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி இந்துக்கள் நைனாமுகமது மறைவுக்கு இறங்கல் தெரிவித்து பல இடங்களில் டிஜிட்டல் போர்டு வைத்தனர். அந்த போர்டுகளில் ஒன்றில் 'துணையாய் இருந்தாய். துணிவாய் இருந்தோம். உதிர்ந்து போனாய்... அதிர்ந்து போனோம். கண் மூடினால் உன் கனவு... கண் திறந்தால் உன் நினைவு.' என்று வாசகம் எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகங்கள் இஸ்லாமியர்களிடையே மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் முஸ்லீம் ஒருவரது மறைவிற்கு இந்துக்கள் டிஜிட்டல் போர்டு வைத்த இச்சம்பவம் அனைத்து மதத்தினரையும் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமல்லாமல் பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டையில் மத ஒற்றுமையிற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.


மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.