திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை மனுதிருவாரூர்- காரைக்குடி அகல ரயில்பாதை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏ ஆடலரசனிடம் புகைப்பட கலைஞர்கள் மனு கொடுத்தனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கம் சார்பில் எம்எல்ஏ ஆடலரசனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடித்து ரயில் போக்குவரத்தை துவக்கிட சட்டசபையில் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கோரிக்கை மனுவை சங்க தலைவர் கணேசமூர்த்தி, செயலாளர் சசிசுந்தர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் எம்எல்ஏவிடம் வழங்கினர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.