இந்தப்பதிவுக்கு பதில் சொல்ல சரியான நேரம் இதுவாகவே இருக்கமுடியும்
தயவுசெய்து இப்பதிவை அனைவரும் படித்து உங்கள் பக்கத்தில் பதியுங்கள். உண்மை கிடைத்தும் அதை உலகுக்கு தெரியப்படுத்தாவிட்டால் பொய் வேகமாக நம்மை கடந்துவிடும்.

கடந்த ஜூலை 22 ஆம் தேதி பாஜகவின் தேசிய செயலாளர்  H_Raja இட்ட பதிவைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

இந்தப்பதிவுக்கு பதில் சொல்ல சரியான நேரம் இதுவாகவே இருக்கமுடியும் என்று கருதுகிறேன். அதனால்தான் இப்பதிவு...

கடந்த ஜூலை 27 ஆம் தேதி அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் நீயா நானா கோபிநாத்தும், தொகுப்பாளினி #Dhivya_Dharshini - DD அவர்களும் ஒரு கல்விநிகழ்ச்சிக்கு உதவி செய்வதற்காக கலந்துகொண்டனர்.

அதில் ஒரு கேள்வி ஆற்காடு நவாப் பற்றி வருகிறது. அப்போது தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வேகமாக பதிலளிக்கிறார். அரவிந்த்சாமி கேட்கிறார். எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று. உடனே திவ்யதர்ஷினி தான் அமீர் மஹால் பற்றித்தான் பி.ஹெச்.டி ஆராய்ச்சிப்படிப்பில் உள்ளதாக கூறுகிறார். மேலும் அவர் கூறுகிறார்.

"ஆற்காடு நவாப்களில் முஹம்மது அலிகான் வாலாஜா அவர்கள் பெரிய கொடைவள்ளல். வாலாஜா சாலை அவர் கொடுத்தது. நம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள தெப்பக்குளம் அவர் கொடுத்தது. திருச்சியில் பெரிய கல்லூரிகளாக இருக்கும் செயின்ட் ஜோசப் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரியெல்லாம் அவர் கொடுத்தது.

இன்றைய மெட்ராஸ் பல்கலைகழகத்தின் இடம் அவர்கள் கொடுத்தது. இப்போது இருக்கும் #தலைமைச்செயலகம் அவர்களுடைய #சொந்தவீடு. பின் அவர்களை வெளியேற்றி விட்டார்கள். எப்போது ஹிந்துக்கள் கோவில் கட்டவேண்டும் என்று கேட்டாலும் யோசிக்காமல் கொடுக்கக்கூடியவர்களாக நவாப்கள் இருந்திருக்கிறார்கள்.

அதனாலேயே இப்போதும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் விழா நடக்கும்போது ஆற்காடு நவாப் குடும்பத்திற்குத்தான் முதல் அழைப்பு போகும். அவர்களுக்குத்தான் முதல்மரியாதை செய்யப்படும்."

திவ்யதர்ஷினி இவ்வாறு சொல்லும்போது ஒருநிமிடம் பிரமித்து உட்கார்ந்தேன். கபாலீஸ்வரர் கோவிலுக்கு வள்ளல் நவாப் முஹம்மது அலிகான் கொடுத்ததால் இன்றைக்கும்  முதல் மரியாதை தருகிறார்கள். வரலாறு இப்படியிருக்கும்போது அதே கபாலீஸ்வரர் கோவிலில் இரண்டு முஸ்லீம்கள் இருந்ததால் எவ்வளவு கற்பனை இவருக்குள்....!!!

மிஸ்டர். ராஜா உங்கள் கலவர பருப்பு என் மக்களிடத்தில் வேகாது. ஒரு தேசியகட்சியின் செயலாளரான தாங்கள் இப்படி இழிவாக நடந்துகொண்டது வருத்தமே...

பதிவுக்கு உதவிய தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அவர்களுக்கும் நன்றி. உங்கள் பி.ஹெச்.டி ஆராய்ச்சிப்படிப்பில் வெற்றிபெற வாழ்த்துக்கள்..!

Thanks: முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.