அதிரையில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி !தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் உள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பேரணி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். பேரணியை அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்து சாலை பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றி எடுத்துக் கூறினார். வண்டிப்பேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்ட பேரணி, சேர்மன் வாடி பஸ் ஸ்டாப், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை வழியாக காதிர் முகைதீன் கல்லூரி முக்கம் அருகில் முடிவடைந்தது.

பேரணியில் அதிரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ( தனிப்பிரிவு ) விஜய ஆனந்த், பிரிலியண்ட் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள், ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்தி சென்றனர். பேரணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டி-சர்ட் பனியன்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.  நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்தார்.

 
 
 
 
 
 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.