ராவுத்தர் மரைக்காயர் பிரிவினர் இது எப்படி வந்தது தமிழகத்தில் (பகுதி ஓன்று)
இப்புடி பாடப்புத்தகத்துல அச்சடிச்சு சாதி இல்லன்னு குழந்தைகளுக்கு பாடம் சொல்ற அதே அரசாங்கம்தான் சாதி வாரியா உங்களை பதிஞ்சுக்கங்க அப்போதான் இட ஒதுக்கீடு கெடைக்கும்ன்னும் சொல்றாங்க...!!

 சரி நம்ம மார்க்கதுலதான் சாதி இல்லையே எல்லாரையும் முஸ்லிம்ன்னு பதிய சொல்லலாம்ன்னு பார்த்தா பொருளாதாரத்தில பின் தங்கி இருக்கும் சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கிடு கிடைக்காம போயிடுமே.. சோ அரசாங்கம் பொருளாதார அடிப்படைல பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள் அவர்கள் குல தொழில் மற்றும் வம்சாவழி பெயர்களை கொண்டு பிரித்து அறிவித்து உள்ளனர்.... அத முறைப்படி பயன்படுதிக்கோங்க மக்களேன்னு நம்ம ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த பதிவு எழுதுனா..... இஸ்லாத்த பத்தி எப்போ என்ன தகவல் கெடைக்கும் அத வச்சி அவதூறு பரப்பி இஸ்லாத்த அழிச்சுடலாம்ன்னு (???!!! )கண்ணுல வெளக்கெண்ணை ஊத்திக்கிட்டு தேடுற ஒரு சிலர் கண்ணுல இந்த விழிப்புணர்வு பிரசார பதிவுகள் பட வெறும் வாய்க்கு அவல் கிடச்ச கதையா  "இஸ்லாத்துல ஜாதி இல்லன்னீங்களே? இப்போ நீங்களே சாதிப்படி பிரிச்சு பதிய சொல்ரிங்களே?" அப்புடின்னு என்னமோ உலக மகா ஆதாரம் கெடச்ச மாதிரி வானத்துக்கும் பூமிக்குமா குதிக்க ஆரம்பிச்சுட்டாங்க...!!

இப்போ கூட சொல்றேன் கேட்டுக்கோங்க மக்களே... இஸ்லாத்துல ஜாதின்னு ஒன்னு இல்லவே இல்லங்க........... !! அந்த காலத்துல அவங்க முன்னோர்கள் செஞ்ச தொழில் அடிப்படையிலும் சிலரோட பரம்பரை பெயர்களின் அடிப்படையிலுமே முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்...

உதாரணத்துக்கு...
லெப்பை பிரிவை சேர்ந்தவங்க ஹஜ்ரத் வேல செய்றவங்க ...
ராவுத்தர் பிரிவினரின் முன்னோர் குதிரை பராமரிப்பு, குதிரை வாணிபம் போன்றவற்றில் ஈடுபட்டவங்க... அவங்களோட வம்சம் ராவுத்தர் என்று சொல்லப்படுது
மரைக்காயர் என்று அழைக்கப்படும் பிரிவினரின் முன்னோர் கடல் வாணிபம் செய்தவர்கள்...
ஷேக் , செய்யது போன்ற பிரிவினர் அரபு வம்சாவளிகளை சேர்ந்தவர்கள்...
மாப்பில்லா பிரிவினர் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்ட கேரளா வம்சாவளியினர்...

இந்த அடிப்படைலதான் அரசாங்கம் முஸ்லிம்களை சாதிவாரியா பிரிச்சு இருக்காங்க.....   அப்புடியே தொழில் ரீதியாக வம்சாவளி அடிபடைல சில பிரிவுகள் அரசாங்கம் குறிப்பிட்டு இருந்தாலும் யாரும் யார விடவும் உயர்ந்தவங்க இல்ல...! ஒருத்தரோட சாதியசொல்லி அவங்கள கேவலமா நடத்துறதும்,அவமானப்படுதுறதும் இஸ்லாத்துல இல்ல...!! இல்ல... இல்லவே இல்ல...!!!!
 இஸ்லாத்த பொறுத்த வர படைத்த இறைவன் முன் அனைவரும் சமமே...!! எப்புடின்னு கேக்க மாட்டிங்களா?

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)

இன்ஷா அல்லாஹ் தொடரும்


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.