சவுதியில் பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் இந்திய தொழிலாளர்கள் உணவின்றி தவிப்பு
சவுதி அரேபியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். அவர்களுக்கு உதவ தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டில் பல நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர். பாஸ்போர்ட்கள் நிறுவனங்களிடம் உள்ளதாலும், ஊதியம் தரப்படாததாலும் நாடு திரும்ப முடியாமல் உணவுக்கு திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 800-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உதவி கோரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 10,000 இந்திய தொழிலாளர்கள் நிதி மற்றும் உணவு இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவில் வாழும் 30 லட்சம் இந்தியர்கள், தங்கள் நாட்டு சகோதர சகோதரிகளுக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதற்கட்டமாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வேலையிழந்து தவித்து வரும் இந்திய தொழிலாளர்களுக்கு 15,500 உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சவுதி அரேபியா மற்றும் குவைத் அதிகாரிகளுடன் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் சவுதி அரேபியா செல்ல உள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.