ராஜஸ்தானில் தலித் பெண் கற்பழித்து கொலை
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டு வந்த 17 வயது மதிக்கத்தக்க தலித் பெண்ணை அவர் கல்வி பயிலும் கல்விக் கூடத்திலேயே கற்பழித்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொலை செய்த அவரது உடல் அவரது விடுதியின் தண்ணீர் தொட்டியில் வீசப்பட்டிருந்தது. இவரது உடலை நகராட்சி குப்பை வண்டியில் வைத்து காவல்துறை எடுத்துச் சென்றுள்ளது.
மிகவும் சிறந்த மாணவியான அவர் சிறந்த ஓவியரும் ஆவார். இவரது ஓவியங்கள் ராஜஸ்தான் தலைமை செயலகம் வெளியிட்ட கலை புத்தகத்தில் வெளியாகியுள்ளது.  அப்பெண் விஜேந்திர குமார் என்ற உடற்பயிற்சி ஆசிரியர் அறையில் அவருடன் ஒன்றாக இருந்ததாகவும் இதனை நிர்வாகம் கண்டிக்கவே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் நிர்வாகம் கூறுகிறது.
28ஆம் தேதி அவள் விடுதிக்கு தன் தந்தையுடன் வருகை தந்த போது அங்கே மொத்தம் நான்கு மாணவிகள்தான் இருந்தனர் என்றும் பின்னர் அன்று மாலை தன் தந்தையை தொலைபேசியில் அழைத்தவர், வார்டன் ப்ரியா சுக்லா என்பவர் தன்னை உடற்பயிற்சி ஆசிரியர் அறைக்கு சுத்தம் செய்வதற்காக அனுப்பியதாகவும் அங்கே விஜேந்திர குமார் தன்னை கற்பழித்ததாகவும் கூறினார் என்று அப்பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர்.
நடந்த இந்த சம்பவங்களை மறைக்க இருவரிடமிருந்தும் மன்னிப்பு கடிதத்தை கல்லூரி நிர்வாகம் பெற்றுள்ளது. ஆனால் இதனை அப்பெண்ணின் பெற்றோர்கள் ஏற்பதாக இல்லை. கல்லூரி நிர்வாகம் கூறுவதுபோல் நடந்திருந்தால் தங்களுக்கு ஏன் தகவலளிக்கப்படவில்லை என்றும் இன்னும் அந்த உடற்கல்வி ஆசிரியரை ஏன் பணி நீக்கம் செய்ய வில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். கல்லூரி நிர்வாகத்தினர் தான் தங்கள் பெண்ணை கொலை செய்துவிட்டதாகவும் அதனை மறைக்க அவள் மீது களங்கம் கற்பிக்கின்றனர் என்றும் கூறியுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.