துபாய் விமான நிலைய ஈ-கேட்டை எமிரேட்ஸ் ஐடியை பயன்படுத்தி பயணிகள் ஈசியாக கடக்கலாம் !உலகில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்திறங்கி செல்லும் மிக மிகவும் பிசியான விமான நிலையங்களில் துபையும் ஒன்று அதனால் இயற்கையாகவே குடியேற்றத்துறை வாயில்களில் மிக நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டதை குறைக்கும் வகையில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஈ-கேட் எனும் பயோமெட்ரிக் திட்ட ஒழுங்கமைப்பு வளைகுடா பிராந்தியத்தில் முதலாவதாகவும் உலகளவில் மூன்றாவதாகவும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஈ-கேட் அனுமதி தானியங்கி அட்டையை பெற ஆர்வமுள்ளவர்கள் முறையாக பதிவு செய்து கட்டணமும் செலுத்தினால் வெளிநாடு செல்வோர் துபை விமான நிலையங்கள் வழியாக வெளியேறும் போதும் பின் மீண்டும் உள் நுழையும் போதும் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்த்து விட்டு ஈ-கேட் வழியாக அதன் அட்டைகளை உபயோகப்படுத்தி சில நிமிடங்களுக்குள் வெளியேறும் வசதி கிடைத்துக் கொண்டுள்ளது.

தற்போது ஈ-கேட் அட்டைகளுக்கு பதிலாக அமீரக தேசிய அடையாள அட்டையான எமிரேட்ஸ் ஐடி (அதாங்க நம்ம ஊரு அரைகுறை ஆதார் அட்டையின் முழுமையாக மேம்படுத்தப்பட்ட வடிவம்) வைத்திருக்கும் எவரும் ஈ-கேட் வழியாக உள்நுழைய துபை டெர்மினல் 3ல் மட்டும் தற்போது முதற்கட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது படிப்படியாக துபையின் அனைத்து டெர்மினல்களில் உள்நுழையவும் வெளியேறவும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக பதிவு செய்யவோ, கட்டணம் செலுத்தவோ தேவையில்லை.

துபை டெர்மினல் 3ல் அமைக்கப்பட்டுள்ள 28 தானியங்கி ஈ-கேட் வழியாக சுமார் 12 முதல் 14 நொடிக்குள் எமிரேட்ஸ் ஐடியை உபயோகப்படுத்தி, எமிரேட்ஸ் ஐடி வைத்திருக்கும் எந்த நாட்டுப் பயணியும் உள் நுழையலாம் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதெல்லாம் சரிதான், வில்லங்கம் பிடித்த ஆட்சியாளர்களும் கறைபடிந்த அதிகாரிகளும் நிறைந்திருக்கும் நாட்டிலிருந்து துபைக்கு வரும் பயணிகளுக்கு எந்தளவு ஈ-கேட் பாதுகாப்பானது எனத் தெரியவில்லை. வீட்டிலிருந்து கோபித்து கொண்டு வெளியெறிய இளைஞர்களை எல்லாம் கொடிய இயக்கங்களுடன் இணைத்து கணக்கிடப்படும் நிலையில் மாத, வருடக் கணக்கில் அலைய வேண்டியதை நினைப்பவர்கள் சிறிது தாமதமானலும் வரிசையில் காத்திருந்து தன்னுடைய பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் முத்திரை பதிவதை தானே விரும்புவார்கள் என்ற நியாயமான சந்தேகமும் கூடவே எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.