மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கும் பழங்கள்!நம் வீட்டின் விசேஷ தருணங்களில்,  இடம்பெறுபவை பழத்தட்டுகள். யாரையேனும் பார்க்கச் சென்றாலும் பழங்களே வாங்கிச் செல்கிறோம். பழம் நல்லது என்றும் வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த பழங்களை சாப்பி–்ட்டால் சத்துக்குறைபாடு நீங்கும் என்று மட்டுமே அறிந்திருந்த நமக்கு, இதன் பின்னே மறைந்திருக்கும் மருத்துவத் தகவல்கள் ஆச்சரியம் அளிப்பவை.

தவறாமல் பழங்கள் சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயநோயால் ஏற்படும் அபாயம் குறைவதாக, அமெரிக்காவின் மருத்துவ இதழான ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிச’னில் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீன மருத்துவ அறிவியல் அகாடமியின் ஆய்வாளர்கள், சீனாவின் நகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த 30 முதல் 79 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரில் 5 லட்சத்து 12 ஆயிரத்து 891 நபர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்.

இவர்களில் 18 சதவிகிதம் பேர் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் 7 ஆண்டுகால வரலாற்றை ஆராய்ந்ததில், அனைவருமே இதயநோய் அற்றவர்களாகவும், தினசரி உணவில் பழங்கள் சாப்பிடுபவர்களாகவும் இருந்தனர். “எப்போதாவது பழங்களை சாப்பிடுபவர்கள் மற்றும் பழங்கள் சாப்பிடும் பழக்கம் அறவே இல்லாதவர்களைக் காட்டிலும், தினசரி தவறாமல் பழங்களை உண்ணும் பழக்கம் உடையவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு குறைந்து இருந்ததோடு, மாரடைப்பு, பக்கவாத நோய் அபாயம் குறைந்தவர்களாகவும் காணப்பட்டார்கள். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்” என்கின்றனர் ஆய்வாளர்கள்.அப்புறமென்ன..? `பழம்’பெருமை பேச வேண்டியதுதானே!    
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.