பா.ஜ.க.வின் மதவாத கொள்கைக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க MP-களின் தொடர் மதவாத பேச்சுக்களை கண்டித்தும், மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பா.ஜ.க MP-களின் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தியும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது. கடந்த 14/09/2014 ஞாயிற்றுக்கிழமை அன்று உத்திரபிரதேச பாஜக MP சாக்ஷி மகராஜ், நடேமா என்ற பகுதியில் செய்தியாளர்களிடம் முஸ்லிம்களின் தேசபற்றை சந்தேகித்தும், மதரஸாக்கள் தீவிரவாதத்தை கற்று கொடுக்கும் இடம் என்றும் ,லவ் ஜிஹாத் செய்கிறார்கள் என தவறான குற்ற சாட்டுகள் மூலம் வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக கூறியுள்ளார். உ.பி.யில் இடைத்தேர்தல்களுக்கு முன்னால் அங்கு ஒரு வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே பேசியுள்ளார். தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அதிகாரத்திற்கு வரும் காலங்களில் எல்லாம் முஸ்லிம் சமூகத்திற்கும் மற்றும் அதன் மத நிறுவனங்களுக்கும் எதிரான வன்முறை பேச்சுக்கள் தொடர்கதையாகி விட்டது. நமது தேச நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மதரஸாக்கள் ஈடுபடுகின்றன என்பதற்கு ஒரு சிறிய ஆதாரம் கூட கிடையாது. மேலும், நாடு முழுவதும் இயங்கி வரும் மதரஸாக்கள் எப்பொழுதும் மீளாய்வுக்கு திறந்தே வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் இயங்கிவரும் எந்தவொரு மத நிறுவனங்களுக்கும் தேசிய கொடி ஏற்றுதலும், தேசிய கீதம் பாடுதலும் வழக்கமாக இல்லாதபோது மதரஸாக்களை மட்டும் குறிவைப்பது வெளிப்படையான அரசியல் நோக்கமே. எனவே பா.ஜ.க வின் முஸ்லிம் விரோதப்போக்கை கண்டித்து 20.09.2014 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்பாட்டத்திற்கு வட சென்னை மாவட்ட தலைவர் K.S.M இப்ராஹீம்@அஸ்கர் அவர்கள் தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட தலைவர் M.நாகூர் மீரான் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.