ஜாஹிர் நாயக் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரது பிரச்சாரத்தை முடக்க முயலுகின்ற மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம்
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகத்தலைவர் தெஹலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியா மட்டுமன்றி உலகத்தலைவர்கள் பலராலும் அறியப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர்.ஜாஹிர் நாயக்.அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும்,அவரது இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்துக்கு தடை ஏற்படுத்தும் விதத்திலும் இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு தீவிரவாத கண்ணோட்டத்துடன் கருத்துக்களை தெரிவித்து வருகிறது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வங்க தேச தலைநகர் டாக்காவில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் , பிரபல இஸ்லாமிய பேச்சாளர் ஜாகிர் நாயக்கின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர்கள் என அந்நாட்டு அரசு கூறியதால் பாரதீய ஜனதா கட்சியினர் வலியுறுத்தியதன் பேரில் டாக்டர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை ஆய்வு செய்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ள நிலையில் ,ஜாகிர் நாயக் வெறுப்பூட்டும் வகையில் பேசி வருவது ஆட்சேபணைக்குரியது என்றும் அவரது பேச்சுக்களை,பிரச்சாரங்களை ஒளிபரப்பு செய்வோர் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.குற்றம் என்னவென்று உறுதி செய்யப்படாத நிலையில் நடவடிக்கை எடுக்கப்போவதாக வெங்கையா நாயுடு அறிவித்திருப்பது மத்திய அரசின் இரட்டை நிலையை எடுத்துக்காட்டுகிறது.
டாக்டர் ஜாஹிர் நாயக் பல்வேறு மத நிகழ்ச்சிகள் மூலமும், சமூக வலைதளங்களின் மூலமும் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.சமூகங்களிடையே அமைதியை நிலைநாட்டி வருகிறார்.இதனால் அனைத்து தரப்பு மக்களும் சமூக வலைதளங்களின் மூலம் அவரை பின்பற்றி வருகின்றனர்.இதற்கு தடை போடும் விதமாக மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இது இஸ்லாத்தின் நலனுக்கும்,இஸ்லாமியர்களின் உரிமைக்கும் எதிரனது.வலதுசாரி இந்துத்வா கொள்கைக்கு துணை போகும் விதத்தில் மத்திய அரசு செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்ததில் இருந்து இஸ்லாமிய மத தலைவர்களையும், உவைசி போன்ற முக்கிய தலைவர்களையும், இஸ்லாமிய மார்க்கப் பிரச்சார நிகழ்ச்சிகளையும்,மதரஸாக்கள் உள்ளிட்ட இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை ஒடுக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது.குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் சமூக வலைதளங்களில் ஜாஹீர் நாயக்கை பின்பற்றியதால் இவர் மீது நடவடிக்கை பாயும் எனில் நமது நாட்டின் தலைவர்களையும்,அரசியல் தலைவர்களையும் குற்றப்பிண்னனி உடையவர்கள் சமூக வலைதளங்களில் பின்பற்றி வருகின்றனரே,அவ்வாறெனில் இத்தகைய தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன் வருமா?
மாலே கான், அஜ்மீர், சூரத் போன்ற இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் சமபந்தப்பட்ட வலதுசாரி இந்துத்வா  தீவிரவாதி பிரக்யாசிங் உள்ளிட்டோர்களை  சந்தித்த ராஜ்நாத்சிங் உட்பட பாஜக தலைவர்கள் மீது உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்குமா? என்கிற மக்களின் கேள்விக்கு மத்திய அரசின் பதில் என்ன? நாட்டின் ஒற்றுமைக்கும்,நலனுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நாடாளுமன்றத்திலே பேசி வருகின்ற பாஜக எம்.பி க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாத மத்திய அரசு ஜாஹிர்நாயக் உரைகள் பற்றி ஆய்வு செய்து வருவது ஆச்சர்யத்தை தருகிறது.
எனவே மத்திய அரசு டாக்டர்.ஜாஹிர் நாயக் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரது பிரச்சாரத்தை முடக்க முயற்சி மேற்கொள்வதை உடனடியாக கைவிட வேண்டும்.அவரது நிகழ்ச்சிகளையும்,உரைகளையும் ஒளிபரப்பு செய்ய விதித்துள்ள தடையையும் உடனடியாக நீக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் இது போன்ற  அடக்குமுறைகளுக்கு  எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி வலிமையான போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.