கோவில் திருவிழா நடத்த அனுமதிக்காவிட்டால் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவோம் - மீண்டும் பரபரப்புநாகை மாவட்டம் கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் ஒருநாள் திருவிழா நடத்த தலித்துகள் உரிமை கோரும் விவகாரத்தில் இருதரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, திருவிழாவை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டம் கள்ளிமேடு பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த தலித் மக்கள், திருவிழாவின்போது தங்களுக்கும் ஒருநாள் உபயம் வழங்க வேண்டுமென போராடி வருகின்றனர்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்தாண்டு தங்களுக்கு திருவிழாவில் உபயம் வழங்காவிட்டால் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறப்போவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வரும் 8-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் கோவிலில் திருவிழா நடைபெற இருந்தது. அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் இரு தரப்பு மக்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் தலித் மக்களுக்கு கோவில் திருவிழாவில் உரிமை வழங்க கூறப்பட்ட ஆலோசனைகளை எதிர் தரப்பினர் ஏற்க மறுத்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திருவிழாவை தற்காலிகமாக நிறுத்திவைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.