திருச்சியில் தரையிறங்கிய போது விமானத்தின் சக்கரத்தில் கழுகு சிக்கியதால் பரபரப்பு!திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது மலேசியா விமானத்தின் சக்கரத்தில் கழுகு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர்-ஏசியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த விமானம் 167 பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.

திருச்சி விமான நிலையம் வந்ததும் ரன்வேயில் விமானத்தை இறக்க பைலட் முயற்சித்தார். அப்போது கழுகு ஒன்று விமானத்தையொட்டி வருவதை பார்த்த பைலட் விமானத்தை மேல் நோக்கி இயக்கினார். இதனால் கழுகு விமானத்தின் என்ஜின் பகுதியில் சிக்காமல் விமானத்தின் சக்கரத்தில் சிக்கியது. இதில் கழுகு உடல் நசுங்கி சதைப்பகுதி சக்கரத்தில் சிக்கிக் கொண்டது.

சக்கரத்தில் சிக்கியதை மானிட்டரில் பார்த்த பைலட் சக்கரத்தை இயக்கி பார்த்த போது சக்கரம் சுழன்று வழக்கம் போல இயங்கியது. இதையடுத்து விமானத்தை சாமர்த்தியமாக பைலட் ரன்வேயில் இயக்கினார். பின்னர் விமானம் நிற்கும் தளத்திற்கு விமானம் கொண்டு வரப்பட்டு, சக்கரத்தில் சிக்கியிருந்த கழுகின் உடல் பகுதியை ஊழியர்கள் அகற்றினர். இதைத்தொடர்ந்து 167 பயணிகளும் இறக்கி விடப்பட்டனர்.பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நன்றி:மாலை மலர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.