மறக்காம துஆ செய்யுங்கள் - எங்கேயும் எப்பொழுதும் - த மு மு க ஆம்புலன்ஸ் டிரைவர்ஆம்புலன்ஸ் வண்டிகளின் நிலை :
ஆம்புலன்ஸ் மற்றும் இதர வண்டிகள்
விபத்தில் சிக்கிய இந்த வண்டிகளின் நிலையை சிந்தித்து பாருங்கள். ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக நாங்கள் ஒட்டிச் செல்லும் பொழுது வேகம் என்பது மிக முக்கியமானது.
அதே சமயம் விவேகம் என்பது அதைவிட முக்கியமானது.
ஆம்புலன்ஸ் ஒட்டுவது மிகவும் கடினமான மற்றும் உயிரைப் பணயம் வைத்து செய்யக் கூடிய ஒன்று.
எவ்வளவோ சமயங்களில் மயிரிழையில் உயிர் பிழைத்த சம்பவங்கள் உண்டு
இறைவனின் கருணையால் இன்று வரை நிறைய விபத்துகளில் இருந்து தப்பி இன்று உங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் உங்களிடம் ஒரு உதவி கேட்டு கண்ணீருடன் இந்த பதிவை இங்கே பதிவிடுகிறோம்.
அனைத்து சமுதாய மக்களுக்காக 128 ஆம்புலன்ஸ்களுடன் சமுதாய சேவை செய்து வரும் எங்களுக்கும் அழகான குடும்பம் உள்ளது .
ரோட்டில் ஆம்புலன்ஸ் செல்லும் பொழுது கையை தூக்கி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நல்ல உள்ளங்கள் மற்றும் மருத்துவமனையில் உறவினரை சேர்த்து விட்டு அவர்களின்
நலனுக்காக பிரார்த்தனை செய்யும்
நல் உள்ளங்களே
உங்கள் பிரார்த்தனைகளை வல்ல இறைவன் ஏற்றுக் கொள்வானாக
தினம் தினம் பல ஆயிரம் மனிதர்களை வெவ்வேறு காரணங்களுக்காக எங்கள் உயிரை பணயம் வைத்து பயணம்
செய்யும் எங்களையும் உங்களுடைய பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நாங்கள் உங்களிடம் உதவி என்று கேட்டது உங்கள் பிரார்த்தனையில் எங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்பதே ஆகும் .
ஒட்டுமொத்த ஆம்புலன்ஸ் டிரைவர்களின் சார்பாக நான் இதை உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இறைவன் எதை நாடுகின்றானோ அது நடந்தே தீரும் .
இறைவா எங்கள் பயணத்தில் எங்களுக்கு பாதுகாவலனாய் இருப்பாயாக ,
நாங்கள் தூக்கிச் செல்லும் நோயாளிகளுக்கு முழு உடல் நலத்தை தருவாயாக

எங்களுடைய மரண தருவாயில்
லாஇலாஹ இல்லல்லாஹ் முஹமது ரசூலுல்லாஹ்
என்ற திருக்கலிமாவை மறக்காமல் உச்சரிக்கும் வாய்ப்பை தந்தருள்வாயாக ,
யாரப்பே எங்களுடைய துஆவை ஏற்றுக்கொள்வாயாக . தமுமுக வேடசந்தூர் நகரம்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.