கத்தார் நாட்டில் தமிழ நாட்டை சேர்ந்த இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை? விதிக்கப்பட்டதுகத்தாரில் வரும் 30-ஆம் தேதிக்குள் 2 தமிழர்களுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்ற  உள்ளதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கத்தாரில் நடந்த மூதாட்டி கொலை வழக்கு ஒன்றில், தமிழகத்தை சேர்ந்த செல்லதுரை, சுப்ரமணியம் ஆகியோருக்கு மரண தண்டனையும், சிவக்குமார் என்பவருக்கு 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சுரேஷ்குமார், கத்தாருக்கு நேரில் சென்று சிறையில் உள்ளவர்களை சந்தித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 30-ம் தேதி தண்டனை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு முன்பாக அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தலையிட்டு 3 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று செல்லதுரையின் மனைவி ராஜம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Thanks To: http://vkalathurone.blogspot.ae/2016/07/2
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.