ஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01
இப்பகுதியில் மத்ஹபுகளும் அவைகளிலுள்ள இஸ்லாத்திற்கு முரணான சட்டங்களும் தெளிவாக இடம்பெற உள்ளது.

மத்ஹபுகள் பற்றி நாம் ஏன் எழுத வேண்டும்?
இன்று தோன்றியுள்ள மார்க்கப் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமே மத்ஹபுச் சட்டங்கள்தான். குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமான சட்டங்களைப் போதிக்கும் மத்ஹபுகள் எமது நாட்டில் மாத்திரமல்லாது உலக நாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இந்த மத்ஹபு மாயையில் சிக்கியுள்ள அப்பாவி முஸ்லிம்கள் அதன் விபரீதம் புரியாமல் தமது வணக்க வழிபாடுகளில் மத்ஹபுச் சட்டங்களையே பெரும்பாலும் பின்பற்றுகின்றனர்.
இம் மத்ஹபுகளே அநேக அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் சேர்த்து போதிக்கப்படுகின்றது. அனைத்து வழிகெட்ட கொள்கைகளும், அனாச்சாரங்களும், பித்அத்துக்களும் தோன்ற அடிப்படைக் காரணியாக அமையும். இம் மத்ஹபுகள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும். அதற்கு நாம் இரண்டு விடயங்களை கவனத்திற் கொள்ளவேண்டும்.
1. குர்ஆன், ஹதீஸ் ஆகியவைகளின் சட்டங்கள் தெளிவாக மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்படல்.
2. மத்ஹபுகளிலுள்ள குர்ஆன், ஸுன்னாவை அவமதிக்கும் சட்டங்கள், புத்திக்குப் பொருந்தாத ஆபாசத்தை அள்ளியிறைக்கும் விளக்கங்கள், மத்ஹபை பின்பற்றுபவர்களே பின்பற்றாத மத்ஹபிலுள்ள சட்டங்கள் போன்றவைகளை மக்கள் முன் சமர்ப்பித்தல்.

இவ்விரண்டு விடயங்களும் மக்களுக்கு தெளிவாக போதிக்கப்பட்டால் அப்பாவி மக்கள் தங்களைத் திருத்திக் கொண்டு தூய இஸ்லாத்தை விளங்கி தமது மறுமை வாழ்வுக்கு உதவக்கூடிய வணக்க வழிபாடுகள் எது என்பதை இனங்கண்டு கொள்வார்கள்.
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நாம் கூறும் விடயங்களை தெளிவாக சிந்தித்து செயற்பட இறைவன் துணை புரிவானாக!
‘எமது கடமை தெளிவாகச் சொல்வதேயன்றி வேறில்லை.’ (அல்குர்ஆன் 36:17)
‘மத்ஹபு’ என்பதன் பொருள்
மத்ஹபு என்ற சொல்லுக்கு வழிமுறை, போக்கு, கருத்து என்று பொருள்படும். மக்கள் அன்றைய காலகட்டங்களில் தங்களிடம் இருந்த இமாம்களிடம் சந்தேகங்களைக் கேட்பர். அந்த சந்தேகம் பற்றி பின்பு அவர்கள் உரையாடும்போது இது ஷாபியி இமாம் மத்ஹபு(ஷாபியின் கருத்து) இது மாலிகி மத்ஹபு(மாலிகின் கருத்து) இப்படிப் பேசிக்கொள்வர். இவர்கள் இவ்வாறு பேசும்போது பயன்படுத்திய வார்த்தை நிலைத்து இறுதியில் ‘மத்ஹபு’ என்பது இஸ்லாத்தில் உள்ள பிரிவுகளுக்கு பயன்படுத்தும் வார்த்தையாக மாறிவிட்டது.
சொல் ரீதியாக ஆராயும்போது ‘தஹப’ என்ற பதத்திலிருந்து பிறந்த ஒரு சொல்தான் மத்ஹபு என்ற சொல்லாகும். ”தஹப’ என்றால் போனான் என்பது பொருள். ‘மத்ஹபு’ என்றால் போகுமிடம் என்று பொருள்படும். எனவேதான் ஒரு ஹதீஸில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘நபியவர்கள் மத்ஹபுக்குப் போக நாடினால் தூரமாகுவார்கள்.’ (ஆதாரம்: அபூதாவுத்-01)
இவ்விடத்தில் ‘மத்ஹபு’ என்ற சொல் ‘கழிவறை’ எனும் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை அறியலாம். இஸ்லாத்தில் நான்கு மத்ஹபுகள் மட்டுமே உள்ளன. அவை ஹனபி, ஷாபியி, மாலிகி, ஹன்பலி என முஸ்லிகள் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு எண்ணமாகும். இஸ்லாத்தில் பல மத்ஹபுகள் உண்டாயின. அவைகளில் முக்கியமான வைகளாக பின்வருபவற்றை குறிப்பிடலாம்.
1. சைதி மத்ஹபு
இம் மத்ஹபின் தலைவரின் பெயர் ‘சைத் பின் அலி’ என்பதாகும். இவர் ஹுசைன்(ரழி) அவர்களின் வழித்தோன்றலாவார். நபியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகினறது. கி.பி.700க்குப் பின் மதீனாவில் பிறந்து 740ல் மரணமடைந்தார். இவர் இமாம் அபூஹனிபா காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எமன் நாட்டில் இம் மத்ஹபு இன்றும் கூட பின்பற்றப்படுகிறது.
2. அவ்சாயி மத்ஹபு
இம்மத்ஹபின் தலைவரின் பெயர் அப்துர் ரஹ்மான் பின் அல் அவ்சாயி என்பதாகும். இவர் கி.பி.708ல் பிறந்து 774ல் மரணமடைந்தார். இவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். இவரும் இமாம் அபூஹனீபா காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. ழாஹிரி மத்ஹபு
இம் மத்ஹபின் ஸ்தாபகர் பெயர் தாவுத் இப்னு அலி என்பதாகும். இவர் கி.பி.715ல் கூபாவில் பிறந்து 883ல் மரணமடைந்தார். ஸ்பெயின் போன்ற நாடுகளில் இம் மத்ஹபு காணப்படுகிறது. இவர் இமாம் ஹன்பலியின் காலத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
4. லைதி மத்ஹபு
இதைத் தோற்றுவித்தவர் லைத் என்பவர் என்று கூறப்படுகின்றது. இவர் எகிப்தில் கி.பி. 716ல் பிறந்து 791ல் மரணமடைந்தார். இவரும் இமாம் அபூஹனீபாவின் காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
5. தவ்ரி மத்ஹபு
இம் மத்ஹபுக்குச் சொந்தக்காரரின் பெயர் சுப்யானுத் தவ்ரி என்பதாகும். இவர் கி.பி. 719ல் கூபாவில் பிறந்து 777ல் மரணமடைந்தார். இவரும் இமாம் அபூஹனீபாவின் காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
6. ஜரீரி மத்ஹபு
இம் மத்ஹபின் தலைவர் முஹம்மது இப்னு ஜரீர் இப்னு யஸீத், என்பவராவார். கி.பி.839ல் பிறந்து 929ல் மரணமடைந்தார்.
ஆகவே மத்ஹபுகள் என்பது நான்கோடு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இன்னும் பல உண்டு என்பதை அறியலாம். ‘மத்ஹபு’ என்பது அந்தந்த இமாம்களின் கருத்தை அடிப்படையாக்க கொண்டு இருந்ததே தவிர அழ்ழாஹ்வாலும் அவனுடைய தூதராலும் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். மேற்கூறப்பட்ட மத்ஹபுகள் மறைந்தமைக் கான காரணங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
1. இம்மத்ஹபுகளைப் பின்பற்றியோர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமை.
2. இம்மத்ஹபை பின்பற்றியோர் அதில் உறுதியாக இல்லாமல் போனமை.
3. இம்மத்ஹபுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் கூடுதல் கவனம் செலுத்தாமை.
நான்கு மத்ஹபுகளான ஹனபி, ஷாபியி, மாலிகி, ஹம்பலி ஆகியவைகள் இன்றுவரை நிலைத்தமைக்கான காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. இந்நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றுவோர் அதிகமாக இருந்தமை.
2. ஆட்சியாளர்கள் இம்மத்ஹபுகளுக்கு ஆதரவாக இருந்தமை.
இதனால்தான் இவைகள் நிலைத்ததேயன்றி இறைவனின் அங்கீகாரத்தால் அல்ல. இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.ஹனபி மத்ஹபு
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களில் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஏறத்தாள 75% சதவீத அரபி மதரஸாக்களும், பள்ளிவாசல்களும், பெரும் நகரங்களிலுள்ள டவுன் காஜிகளூம் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்களாவே இருக்கின்றனர். அண்மைக் காலமாக தமிழகத்தில் உருவாகி வேகமாக வளர்ந்து வரும் குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், அது இவர்களை மிகவும் பாதித்துள்ளதை நிதர்சனமாகக் கண்டு வருகிறோம்.
   தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் சட்டங்களுக்கு மாறாக குர்ஆன், ஹதீஸ்களின் சட்டங்கள் வெகுவாக பரவி வருவது இவர்களை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் செயல்பட நினைக்கும் மக்களை பல விதங்களில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதில் அரபி படித்த மவ்லவிகள் பெரும் பங்கேற்று செயலாற்றி வருகின்றனர்.

    இவர்கள் நாம் எடுத்து வைக்கும் ஆதாரங்களை நியாயமான முறையில் விமர்சித்தால் நாமும் அதனை ஏற்கலாம். ஆனால் நமது குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை புறக்கணித்து விட்டு தாங்கள் பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் ஒரு சில பிக்ஹு நூல்களின் ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர். அந்நூல்கள் யாவை? எப்போது தொகுக்கப்பட்டவை என்பதை இங்கு பார்ப்போம். இதம் மூலம் அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தின் உண்மை நிலையை விளங்க முடியும்.

    ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் உண்மைப் பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்) ஆகும். அவர்கள் ஹிஜ்ரி 80ல் கூஃபாவில் பிறந்து பெரும் செல்வந்தராக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள். ஹிஜ்ரி 150ல் மரணமெய்தினார்கள். திருகுர்ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்தார்கள். பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தலைநகராக விளங்கிய கூஃபாவில் வாழ்ந்ததால் ஹதீஸ்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கடினமாகவும், கவனமாகவும் இருந்துள்ளார்கள். “உண்மையான ஹதீஸ்கள் கிடைக்குமானால் அதுவே என் வழி” எனவும் கூறிச் சென்றுள்ளார்கள். இமாமுல் அஃலம் (தலை சிறந்த இமாம்) என அனைவராலும் அன்று முதல் இன்று வரை அழைக்கப்படுகிறார்கள்.

    அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும் எழுதி வைத்துச் சென்றுள்ளதற்கு அறவே ஆதாரங்களில்லை. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களுக்கு முஅத்தா மாலிகி என்ற ஹதீஸ் நூலும், இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் ஷாபிஈ, உம்மு போன்ற நூல்களும், இமாம் ஹம்பலி(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் அஹ்மத் போன்ற நூல்களும் அந்தந்த இமாம்களால் தொகுக்கப்பட்டவை இன்று வரை இருப்பதை நாம் காணலாம். ஆனால் இவர்கள் அனைவருக்கும் முந்தியவராக இமாமுல் அஃலம் என அனைவராலும் போற்றப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் ஏன் ஒரு நூலைக்கூட எழுதவில்லை? நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப்பின் முதல் நூற்றாண்டிலேயே பிறந்த அபூஹனீபா(ரஹ்) இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையிலுள்ள ஹதீஸ்களும் போதுமென்ற நினைவில் எந்த நூலையும் எழுதவில்லையென நான் நல்லெண்ணம் கொள்கிறோம்.

    இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிக்குற்குப்பின் அவரது மாணவர் முகம்மது(ரஹ்) அவர்கள் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களைப் பின்பற்றி “முஅத்தா முஹம்மது” என ஒரு ஹதீஸ் நூலை எழுதியிருப்பது யாவரும் நன்கரிவர். அது இன்றும் மக்களிடையே உள்ளது. இவ்விதமாக எந்நூலையும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் எழுதாமலிருக்க, பின்வந்தவர்கள் மார்க்கத்தில் இல்லாததையும் பொல்லாததையும் எழுதி தங்களது பெயரில் வெளியிட்டால் மக்களிடையே எடுபடாது என எண்ணி அனைவராலும் “இமாமுல் அஃலம்” எனப்புகழப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களிம் பெயரில் ஹனபி சட்டங்களாக அறங்கேற்றினர். இவர்கள் கூறும் கூற்றுகளை அபூஹனீபா(ரஹ்) அவர்களின் கூற்றாக மக்களிடையே பிரபல்யபடுத்தியுள்ளனர்.

    ஹனபி மத்ஹபின் முக்கிய பிக்ஹு நூல்களாக இன்று மக்களைடையே உலவி வரும் நூல்களையும், அவை தொகுக்கப்பட்ட காலங்களையும் கீழ்காணும் அட்டவணையிலிருந்து பார்த்து இது இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் கூறப்பட்டிருக்க முடியுமா? என்பதை வாசகர்களும், தங்களை ஹனபிகள் எனக்கூறிக் கொள்வோரும் கவனிக்க வேண்டுகிறோம்.

இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் காலம் = ஹிஜ்ரி 80 முதல் 180 வரை
 ஹனபி மத்ஹபின் பிரபல்யமான பிக்ஹு நூல்களாக இன்று நடைமுறையிலுள்ளவைகளும் அவை தொகுக்கப்பட்ட காலமும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.