திருமாவளவன் வீசும் புதிய குண்டு: சுவாதி முஸ்லீம் மதத்திற்கு மாற இருந்தார்சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் தினமும் ஒவ்வொரு தகவலாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் பிராமண பெண்ணான சுவாதி முஸ்லீம் மதத்திற்கு மாற இருந்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முஸ்லீம் ஒருவர் தான் இந்த கொலையை செய்திருப்பார் என ஒரு சில கூறி பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. பின்னர் ராம்குமார் கைது செய்யப்பட்டதும் முஸ்லீம் குறித்த தகவல்கள் மங்கிப்போனது.

ராம்குமார் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தலித் அமைப்புகள் ராம்குமாருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. இதனையடுத்து ஸ்வாதி முஸ்லீம் மதத்துக்கு மாற இருந்ததாகவும், ரமலானுக்கு நோம்பு இருந்து கடைபிடித்ததாகவும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், முஸ்லீம் மதத்துக்கு மாறும் மன நிலையில் சுவாதி இருந்துள்ளதாக, அவரது நட்பு வட்டத்தினர் மூலம் தெரியவந்துள்ளது.

சுவாதி முஸ்லீம் மதத்திற்கும் மாறும் மனநிலைக்கு வர என்ன காரணம், அவர் மதம் மாறுவது பிடிக்காத சிலர் கூட இந்தக் கொலையை செய்திருக்கலாம். எனவே, காவல்துறையினர் ஒரே வழியில் விசாரணையை தொடராமல், பல கோணங்களில் விசாரிக்க வேண்டும் என்று திரியை கொளுத்தி போட்டுள்ளார் திருமாவளவன். அவர் கொளுத்தி போட்டிருக்கும் இந்த திரி பற்றி எரியுமா அல்லது அப்படியே அனைந்துவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.