இதுதான் இஸ்லாம்.!துபாயைச் சேர்ந்த அரபு தொழிலதிபர் ஷேக் ஷைத் பின் ஷைய்ஃப் சில மாதங்களுக்கு முன்பு தனது நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராதாகிருஷ்ணன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளாவில் உள்ள எடப்பாள் கிராமத்திற்கு வந்திருந்தார்.

காரில் பயணிக்கும் போது அந்த கிராமத்தில் பெண்கள் கையிலும், தலையிலும் குடத்தை சுமந்து கொண்டு தண்ணீருக்கு அலைவதும், குழாயடிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் பார்த்து விசாரித்த அரபு ஷேக் எடப்பாள் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதை தெரிந்து கொண்டார்.

எடப்பாள் கிராம மக்களின் தாகம் தணிக்கும் முயற்சியில் உதவும் வகையில் நான்கு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மின் மோட்டார் மற்றும் தண்ணீர் தொட்டிகள் அமைத்து கொடுத்ததோடு தனது குடும்பத்துடன் நேரடியாக வந்து திட்டத்தை துவக்கி வைத்தார்.

கடல் கடந்த  தேசம் கடந்த மனிதநேயம், இதுதான் இஸ்லாம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.