மனிதர்கள் எப்படி எரிபொருளாக முடியும்‬?
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம்
.

‪மனிதர்கள்_எப்படி_எரிபொருளாக_முடியும்‬?
.
மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக்கொள்ளுங்கள். நிராகரிப்பவர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. -(அல் குர்ஆன். 2:24.)
.
கல்லும் மனிதர்களும் எரிபொருளாக முடியுமா ?
அறிவியல் ரீதியாக முடியும், அனைத்து பொருள்களும் பல்வேறு தனிமங்களால் ஆனவை.
.
மனித உடலில் உள்ள கார்பன், பொட்டாசியம், கால்சியம், மாங்கனிஸ், சிலிக்கா, சோடியம் போன்ற எல்லா தனிமங்களும் (Minerals) கற்களிலும் உள்ளன. அவைகள் இருக்கும் சதவீதம் மட்டுமே மாறுபட்டு இருக்கும். எல்லாமே எரியக்கூடியவைதான்.
.
ஒவ்வொரு பொருளுக்கும் அது தானாக எரிவதற்கான வரம்பு வெப்ப நிலை உண்டு. (Autoignition Temperature) அந்த வெப்ப நிலை வந்துவிட்டால் தன்னில் உள்ள கார்பன் எனும் கரிமத்தை வெளியிட்டு காற்றில் உள்ள ஆக்ஜிஜனுடன் சேர்ந்து தானாகவே எரிய ஆரம்பித்து விடும். இப்பொருள் எரிவதற்கு நெருப்பு பற்றவைக்க வேண்டியதில்லை.
.
சாதாரண பேப்பர் 218-246 C செல்சியஸ் வெப்பநிலையில் தானாக எரிய ஆரம்பிக்கும். சுடுகாட்டில் வரட்டி, விறகு வைத்து எரிக்கப்படும் பிணம் 800 C செல்சியஸ் வெப்பநிலை வந்தவுடன் தானாக எரிய ஆரம்பிக்கும்.
.
இன்று உலகில் உள்ள பாறைக்கற்களில் சுமார் 95% கற்கள் பூமியின் அடி ஆழத்தில் உருகி நெருப்புக் குழம்பாய் எரிமலையாய் வெடித்து வெளிவந்தவைதான். கற்கள் எரிவதும் உருகுவதும் ஆச்சரியமல்ல.
.
இன்று நிலக்கரி என்று எரிக்கிறோமே இதுவும் பாறை இனத்தை (Sedimentary Rock) சேர்ந்த ஒன்றுதான். மனிதனின் உடலும் ஒரு சிறந்த எரிபொருளாக உள்ளது. ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா?
.
இன்று நம்மிடையே உள்ள எரிபொருள்களில் நிலக்கரி, மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் போன்றவைகளை விட 11% கூடுதல் வெப்பத்திறனை (BTU)கொடுக்கக்கூடியது நமது உடலில் உள்ள கொழுப்பு. (“In energy terms, the average BTU of a gallon of human body fat is actually 11% higher than the BTU of a gallon of diesel gasoline) சராசரியாக ஒவ்வொரு மனிதரிடமும் உள்ள கொழுப்பில் சுமார் 7 1/2 லிட்டர் உயர்ரக எரிபொருள் உள்ளது. (BTU, of fat is 127,000 per gallon, and gasoline lags behind at only 115,500 BTU per gallon.)
.
நமது உடலில் உள்ள ஒரு பவுண்டு எடையுள்ள தசைகள், எரியும்போது சுமார் 1000 BTU (British Thermal Unit) வெப்ப சக்தியை கொடுக்கும். அதேசமயம் நமது உடலில் உள்ள கொழுப்புகள் உருகி எரியும்போது சுமார் 20,000 BTU. வெப்ப சக்தியை கொடுக்கின்றன.
.
மனித உடலில் 70 % தண்ணீர் இருப்பதால் ஒரு பிணத்தின் தசைகள் முழுவதும் எரிவதற்கு 1400 F தேவைப்படுகிறது. நெருப்பு முதலில் தோல், அடுத்து தசைகளை பொசுக்கி, உடல் நீரை ஆவியாக்கி, பின்பு முற்றாக எரித்துவிடுகிறது.
இதுபோல் கற்களும் எறிவதற்கு இதே அளவு வெப்பமே ( 1300 F-2400 F) எடுத்துக்கொள்கிறது.
.
மறுமையில் நரகவாசிகள் உயிருடன் நெருப்பில் பொசுக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார்கள். அது மரணமில்லா பெரு வேதனை தொடராகும். அங்கு மாமிச மலை போன்ற மனிதனின் தோல், தசை, கொழுப்புகள் எரிபொருளாக மாறிவிடும். இவ்வுலகில் ஒரு பருத்த பிணத்தை எரித்தால் அதில் 17,000 Btu வெப்ப ஆற்றல் வெளியாகும். மாமிச மலை நரகவாசிகள் கொழுப்பு உருகி பலமடங்கு வெப்பம் உயர்ந்து, நரக எரிபொருளாக மாறுவார்கள்.
.
சிந்தியுங்கள் செயல்படுங்கள்
திருக்குர்ஆனில் அறிவியல்
மறுமை நாளை நோக்கி ...
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.