முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் சார்பில் பல்வேறு போட்டிகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா! படங்கள் இணைப்பு



திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் சார்பில் மாணவ மாணவிகளுக்கான கோடை கால திருக்குர்ஆன் பயிற்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா கொய்யா திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் முகமது புகாரி தலைமை வகித்தார். கிளை தலைவர் முகமது அலி ஜின்னா, துணைத்தலைவர்கள் முகமது யூசுப், சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவாரூர் மாவட்ட அழைப்பாளர் முகமது சித்திக் கலந்துக்கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னால் மாவட்ட தலைவர் அன்சாரி, வெளிநாடு வாழ் நிர்வாகிகள் புரைதா பரக்கத் அலி, குவைத் அன்சாரி, துபாய் சேக்காதி, மாவட்ட மருத்துவ அணி நிர்வாகி பிர்தொவ்ஸ் கான், கிளை நிர்வாகிகள் கட்டிநானா மீரான் லெப்பை, சுபைகான் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.




மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை



Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.