முத்துப்பேட்டை அருகே பறக்க முடியாமல் தவித்த நீர் காகத்துக்கு சிகிச்சை - ரேஞ்சர் அயூப்கான் உத்தரவுமுத்துப்பேட்டை அருகே பறக்க முடியாமல் தவித்த நீர்காகத்தின் குஞ்சுக்கு வனத்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கிராமத்தில் நேற்று நீர்காக குஞ்சு ஒன்று பறக்க முடியாமல் சாலையில் தவித்துக்கொண்டிருந்தது. இதனை காகங்கள் விரட்டி விரட்டி கொத்தின. இதனைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர், நீர்காக குஞ்சை மீட்டு முத்துப்பேட்டை பாலகுமார் வசம் ஒப்படைத்தார். அவர் முத்துப்பேட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். ரேஞ்சர் அயூப்கான் உத்தரவுப்படி வனத்துறையினர் முத்துப்பேட்டை கால்நடை மருத்துவமனைக்கு சென்று அதற்கு முதலுதவி செய்து உதையமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் கொண்டு சென்று அப்பகுதியில் உள்ள ஏறி பகுதியில் விட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.