பிரதமர் மோடி என்னை கொலை கூட செய்யலாம்: அரவிந்த் கெஜ்ரிவால் சொல்கிறார் - வீடியோ
பிரதமர் மோடிக்கு எதிராக  அண்மைக்காலமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று ஒருபடி மேலே சென்று, தன்னை கொலை செய்யும் அளவிற்கு மோடி விரக்தியில் இருக்கிறார் என்று கடுமையாக சாடியுள்ளார்.

வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து அதில் கூறியிருப்பதாவது:- “ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளுக்கு பின்னால் பிரதமர் மோடியின் கைகரியம் உள்ளது என்றார்.

மேலும் ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும், எவரும் கொல்லப்படலாம் என்று வீடியோ மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். பஞ்சாப், குஜராத் மற்றும் கோவாவில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதால் பிரதமர் மோடி அவர்கள் மிகுந்த விரக்தியில் இருப்பதாகவும், திட்டமிட்டு ஆம் ஆத்மியை சேர்ந்தவர்களை கைது செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ள கெஜ்ரிவால், உச்ச கட்ட தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பவர்கள் தங்களோடு இருக்கலாம் எனவும், பலவீனமாக இருப்பவர்கள் தாராளமாக எங்களை விட்டு செல்லலாம் எனவும் .தெரிவித்துள்ளார்

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.