மத்திய அமைச்சரவைலிருந்து ஸ்மிருதி அதிரடி நீக்கம் – வீடியோமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 5ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் இருந்த மனித வளத்துறை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்துஸ்மிருதி இரானி ஜவுளி துறைக்கு மாற்றப்பட்டார்.


இந்த சூழலில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவையும் மாற்றி அமைத்து நேற்று பிரதமர் மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


இதில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவில் ஸ்மிரிதி இரானி இடம் பெற்று இருந்தார். தற்போது அந்த குழுவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்து மோடி உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரகாஷ் ஜவடேகர் குழுவில் இடம் பிடிக்கிறார்.


அதே போல் புதிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த குமார், சட்டத்துறைக்கு மாற்றப்பட்ட ரவிசங்கர், உணவு பதப்படுத்தும் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோர் புதிதாக அரசியல் விவகார கமிட்டியில் இடம் பிடிக்கின்றனர்.


மேலும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ஆனந்த குமார் ஆகியோர் பொருளாதார விவகார கமிட்டிகளில் புதிதாக  இடம் பிடிக்கின்றனர். பாதுகாப்பு கமிட்டி தவிர மற்ற 6 கமிட்டிகளையும் பிரதமர் மோடி நேற்று மாற்றி அமைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.