பேட்டை ரேஷன் கடையில் இருந்து இறால் பண்ணைகளுக்கு மொத்தமாக கல்ல மார்கெட்டில் பொருட்கள் விற்பனை - பரபரப்பு
முத்துப்பேட்டை அடுத்த பேட்டை ரேஷன் கடையில் இருந்து இறால் பண்ணைகளுக்கு மொத்தமாக ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவாரூர் கலெக்டருக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு அனுப்பி உள்ளனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: 


முத்துப்பேட்டை அடுத்த பேட்டையில் உள்ள அங்காடி எண் P004 என்ற கடையில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இந்த அங்காடி பணியாளர் எந்த பொருட்கள் கேட்டாலும் நாளை வாருங்கள் என கூறி அழைக்கழிக்கிறார். இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் போகிறது. பணி நேரத்தில் மாலை 3 முதல் 7 மணி வரை தினமும் கணக்கு பார்ப்பதாக கூறி அந்த நேரத்தில் பொருட்கள் வழங்குவதில்லை. கடையையும் முறையாக திறப்பதில்லை. அறிவிப்பு பலகையிலும் எழுதுவதில்லை.

மாதத்தில் 15,20 தேதிகளில் சென்று பொருட்கள் கேட்டால் இருப்பு இல்லை. தீர்ந்து விட்டது. இனிமேல் வந்தால்தான் வழங்கப்படும். அதுவும் பற்றாக்குறையாகத்தான் வரும் என கூறுகிறார். கடந்த ஜுன் மாதம் ஆயில், சர்க்கரை, உளுந்து போன்ற பொருட்கள் பலருக்கு வழங்கவில்லை. இது குறித்து கேட்டபோது பொருட்கள் பற்றாக்குறையாகத்தான் வருகிறது. விளக்கம் உங்களுக்கு தேவை என்றால் டி.எஸ்ஓவிடம் கேளுங்கள் என்று கூறுகிறார். மேலும் பாமாயில் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் தான் வழங்குகிறார். 

இது போன்று பொதுமக்கள் வாங்க முடியாமல் போன பொருட்களை வாங்கியது போல் பொய் கணக்கு காண்பித்து உள்ளூர் வியாபாரி ஒருவர் துணையுடன் வெளி சந்தையிலும், அப்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளுக்கும் மொத்தமாக ஆட்டோவில் பொருட்களை எடுத்து சென்று விற்று கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்.  மேலும் இப்பகுதியில் போலி ரேஷன் கார்டுகள் உள்ளன. இதற்கு உடந்தையாக ரேஷன் கடை பணியாளர் செயல்படுகிறார்.
 இது குறித்து ஆய்வு செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் திருவாரூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர், திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலருக்கும் தனித்தனியாக புகார் மனு அனுப்பி உள்ளனர். 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.