தஞ்சையில் தமுமுக - மமக வின் மனிதநேய பணி ..தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம் கண்டியூர் கிராமத்தில் 12.7.16 அன்று மாலை தீ விபத்தில் 60 வீடுகள் எறிந்து சாம்பலாகியது குடியிருந்தவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று கட்டிய துணியோடு வெளியேறினர் அதில் உடல் நல பாதிப்பில் இருந்த ஒரு ஆண் மட்டும் உயிரிழந்தார். மற்றவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் தமுமுக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் - மனிதநேய மக்கள் கட்சி யின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா தலைமையில் திறண்டு தீ யில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலமிறங்கி மீட்பு பணிகளில் இணைத்து கொண்டனர் பிறகு கண்டியூர் ஜமாத்தார்களோடு ஆலோசனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்வதை தமுமுக சார்பில் தாங்கள் ஏற்று கொள்வதாக தஞ்சை பாதுஷா கூறினார்.
தமுமுக வின் தொண்டர் அணியினர் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டுகொண்டு வருகின்றனர்.
அதை தொடர்ந்து இன்று 14.7.16 வெள்ளிக்கிழமை மாலை தமுமுக - மமக சார்பாக தஞ்சை பாதுஷா தலைமையிலான குழு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்யாவசிய தேவைக்கான பொருள்களான பிளாஸ்டிக் அண்டா, மக், பாய், தலையணை, கைலி, போர்வை , நைட்டி, சோப்பு, ரொட்டி பாக்கெட்டுகள், பல் துளக்கும் பிரஸ், பேஸ்ட்,
சோப்பு தூள் மற்றும் இதர பொருள்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா, தமுமுக திருவையாறு ஒன்றிய தமுமுக செயலாளர் முஸ்தபா, மமக ஒன்றிய செயலாளர் சித்திக், மாவட்ட துணைசெயலாளர் அப்துல் அஜீஸ், கண்டியூர் கிளை பொருப்பாளர் காலித், தஞ்சை நகர நிர்வாகிகள் அப்துல் ஜப்பார், லுக்மன், மகபூப்பாட்ஷா, நூர் முகம்மது, முபாரக், நாசர்,ஆரிப், மற்றும் தமுமுக-மமக வின் கிளை நிர்வாகிகள், தொண்டர் அணியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவியும் , தனி நபர் உதவியம் விரைவில் கிடைத்து மகிழ்ச்சியாக வாழ பிரார்த்திப்போம்
தகவல் :
தமுமுக
மாவட்ட அலுவலகம்
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.