இந்திய தேச வளர்ச்சியில், முஸ்லிம் மன்னர்களின் பங்கு -டிடி- யின் அதிரடி பதில் வீடியோபல கோவில்களுக்கு தானமளித்த ஆற்காடு நவாபுகள்!

'முஸ்லிம்கள் இந்துக்களின் கோவில்களை இடித்து பள்ளி கட்டினார்கள்' என்ற பொய்யை பல காலமாக நாம் படித்து வருகிறோம். ஆனால் விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி அனைத்து பொய்களையும் உடைத்தெறிகிறது.

1.தற்போது சென்னையில் உள்ள வாலாஜா ரோடும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளும் முகமது அலிகான் தானமாக கொடுத்தது. அவரது பெயராலேயே இன்றும் வாலாஜா என்று வழங்கப்படுகிறது.

2. திருச்சி செய்ன்ட் ஜோஸப் கல்லூரி, பிஷப் கல்லூரி, ஆற்காடு நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.

3. தற்போது சென்னையில் உள்ள தலைமை செயலகம் ஆற்காடு நவாபு அவர்களின் சொந்த வீடாகும். அதனையும் தானமாக தந்துள்ளார்.

4. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பக் குளம் ஆற்காடு நவாபால் தானமாக அளிக்கப்பட்டது. வருடா வருடம் இந்த கோவிலில் அவரை அழைத்து முதல் மரியாதை இன்று வரை கொடுத்து வருகின்றனர்.

5. தற்போதுள்ள மெட்ராஸ் யுனிவர்சிடியும் ஆற்காடு நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.

தங்களின் சொந்த வீட்டையும் கோடிக்கணக்கான பெறுமானமுள்ள தங்களின் சொத்துக்களையும் இந்து கோவில்களுக்கும் அரசு கட்டிடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தானமாக கொடுத்தது முஸ்லிம்கள்.

ஆனால் நமது வரலாறு பாடத் திட்டங்களில் சொல்லிக் கொடுப்பதே நேரெதிராக. விஜய் டிவியின் டிடி தற்போது ஆற்காடு நவாபுகளின் சரித்திரத்தை பிஹெச்டி பண்ணிக் கொண்டுள்ளார். அவரது ஆய்வில் கிடைத்த தகவல்களே இது.

ராம கோபாலன்களும், ஹெச் ராஜாக்களும் இந்த உண்மைகளை எல்லாம் படித்து தெளிவு பெறுவார்களாக!

 தமிழகம் என்றுமே இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் என்பதனையும் இந்துத்வாவாதிகளுக்கு இதன் மூலம் சொல்லிக் கொள்கிறோம்.

-சுவனப் பிரியன்-
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.