எங்கெல்லாம் பான்கார்டு எண் தேவைப்படும்?தற்போது பல இடங்களில் பான்கார்டு எண் கேட்கப்படுகிறது. சிலநேரங்களில் நாம் எதிர்பார்க்காதபோது எல்லாம் பான் எண் கேட்கப்படுவது போலத் தோன்றுகிறது.
உண்மையில், எங்கெல்லாம் பான்கார்டு எண் தேவைப்படும்?
இதோ, இப்போது அறிந்துகொள்வோம்…
வங்கியில் ஒரே நேரத்தில 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கட்டும்போது அல்லது எடுக்கும்போது நமது பான்கார்டு எண்ணை குறிப்பிடுவது அவசியம்.

அதேபோல, ஐந்து லட்ச ரூபாய்க்கு அதிகமாக சொத்து வாங்கும்போது அல்லது விற்கும்போது, பான் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.
தொலைபேசி, செல்போன் இணைப்பு பெறும்போதும் பான் எண் கேட்கப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்யும்போதும் பான் எண்ணைக் குறிப்பிடுவது அவசியம்.
பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய பான்கார்டு இருந்தால்தான் முடியும்.

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட பான்கார்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு இரண்டு கார்டு இருந்தால், ஏதாவது ஒரு கார்டை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து விடவேண்டும். பொதுவாக, ஒருவர் இரண்டு பான்கார்டு வைத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

மேலும், பான்கார்டுகளை கொண்டு மோசடி செய்தால், வருமான வரித்துறை விசாரணைக்கு இலக்காகி, அபராதம் விதிக்கப்பட நேரும். சிறைத் தண்டனையும் கிடைக்கும்.
வழங்கப்பட்ட பான்கார்டு பற்றிய விவரங்களை வருமான வரித்துறை அதன் இணையதளத்தில் உடனுக்குடன் சேர்த்து விடுகிறது. அதிகாரபூர்வமற்றவர்களிடம் போலியாக பான்கார்டு பெற்றால் அதுபற்றிய விவரம் இதில் இடம் பெறாது.

எனவே, தனியார் ஏஜென்டுகள் மூலம் கார்டு வாங்கினால் அதனை வருமான வரித்துறையின் இணையதளத்தில் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது பலரும் வெளிநபர்கள் மூலம் விண்ணப்பித்து பான்கார்டு பெறு கிறார்கள். அவர்கள் எல்லாம் உஷாராக இருக்க வேண்டும்.
ஏற்கனவே வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட சாதாரண பான்கார்டை தற்போதுள்ளது போல் பளபள கார்டாக மாற்ற வழி இருக்கிறது. அதற்கு, பழைய கார்டுடனோ அல்லது பழைய பான் எண்ணைக் குறிப்பிடும் ஏதாவது ஓர் ஆவணத்துடன், புதிதாக பான் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதற்கு உரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

விவசாய வருமானத்தை மட்டும் நம்பி இருப்பவர்கள் வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்பதால் அவர் களுக்கு பான் கார்டின் அவசியம் இல்லை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.