திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தல்முத்துப்பேட்டை  – திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.

மாவட்ட ஊராட்சி கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அரங்கில் மாவட்ட ஊராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி அம்பிகாபதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இளவரசி இளையராஜா, மாவட்ட ஊராட்சி செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பேசியதாவது:–

முருகையன் (இ.கம்யூ):– திருத்துறைப்பூண்டி அருகே ஆலங்காடு என்ற பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுகின்றது. எனவே இந்த இடத்தில் விபத்தை தவிர்க்க ரவுண்டானா அமைத்து உயர்கோபுர மின் விளக்கு வசதியும் ஏற்படுத்திட வேண்டும். திருத்துறைப்பூண்டி–முத்துப்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மக்கள் நலன் கருதி அகற்றிட வேண்டும்.

முதியோர் உதவித்தொகை
தமிழ்ச்செல்வி (இ.கம்யூ):– ஒரு போக சம்பா சாகுபடியை காப்பாற்றிட காவிரி நீரை பெற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயிகளின் வேளாண்மை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆறு, வாய்க்கால் தூர்வாரும் பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும். தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும்.

பூண்டி கே. கலைவாணன் (தி.மு.க):– குறுவைத்தொகுப்பு திட்டத்தில் காலம் கடந்தும் இதுவரை இடுபொருள்கள் கொடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பயன் அளிக்காமல் உள்ளது. கடன் தள்ளுபடி செய்ததில் விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லாமல் உள்ளது. எனவே அரசு ஒதுக்கீடு செய்யும் மானியம், நிதிகள் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு கிடைத்திட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில் மீண்டும் முதல்–அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு தெரிவித்து கொள்வது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.