பேச்சுவார்த்தையில் உடன்பாடு: நாச்சிகுளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி நடக்கவிருந்த உண்ணாவிரதம் தற்காலிக வாபஸ்முத்துப்பேட்டையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி உண்ணாவிரதத்தை தற்காலிகமாக சமூக ஆர்வலர் வாபஸ் பெற்றுள்ளார். முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பால் காணாமல்போன குளங்கள் மற்றும் நீர்நிலைகளை மீட்கும் முயற்சியில்  உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி நாச்சிக்குளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் யாக்கத்தலி. இந்நிலையில் 2014ம் ஆண்டு நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம நிர்வாக அலுவலகம் முன் உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்தார்.
ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றவில்லை. இதனால் கடந்த வாரத்தில் மீண்டும் உண்ணாவிரத ேபாராட்டம் நடத்தப்போவதாக யாக்கத்தலி அறிவித்திருந்தார். இதையடுத்து திருத்துறைப்பூண்டி தாசில்தால் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. தாசில்தார் உதயகுமார் தலைமை வகித்தார். இதில் சமூக ஆர்வலர் யாக்கத்தலி, வட்ட வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன், முத்துப்பேட்டை முகம்மது மாலிக், நுகர்வோர் பாதுகாப்புக்குழு தலைவர் பொன்.வேம்பையன் மற்றும் பலர் பங்கேற்றனர். இதில் அதிகாரிகள் தரப்பில் அணைத்து கோரிக்கைகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து எழுதி கொடுக்கப்பட்டது. இைதயடுத்து சமூக ஆர்வலர் யாக்கத்தலி, உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.