பாபர் மசூதி வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவர் மரணம்பாபர் மசூதி வழக்கினை முதன் முதலில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முகமது ஹாசீம் அன்சாரி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 95.

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் வசித்து வந்த 95 வயதுடைய முகமது ஹாசீம் அன்சாரி இன்று காலை அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இவர் பாபர் மசூதி தொடர்பான வழக்கினை கடந்த 1949ல் எழுப்பினார். பின்னர் சன்னி வக்பு வாரியம் சார்பில் 6 பேருடன் இணைந்து 1961ல் பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் கடந்த 2010ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டாலும், இதற்கான மேல் முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.