மதுரை போலி வெடி குண்டு வழக்கில் அப்பாவி முஸ்லிம் கைது
மதுரை போலி வெடி குண்டு வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மதுரை CBCID SID போலிசார் பொய்யாக கைது செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து...
சமுதாய தலைவர்களின் பார்வை மதுரையின் மீது திரும்பியுள்ளது....
இந்நிலையில் இன்று மஜக மாநில நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சிக்கு மதுரைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சகோ..M.தமிமுன் அன்சாரி மற்றும் மஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பொய் வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அபுபக்கர் சித்தீக் குடும்பத்தினரை நெல்பேட்டை பகுதிக்கு வந்து சந்தித்து விபரங்கள் கேட்டறிந்தனர்
மேலும் தமிமுன் அன்சாரி mla அவர்கள் இது சம்மந்தமாக உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும்...
தகுந்த முகாந்திரம் இல்லாமல் பொய் வழக்கு பதியப்பட்டிருந்தால் நிச்சயம் மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சியும்,எடுப்பதாகவும் கூறினார்
மேலும் பாதிக்கப்பட்ட இளைஞரின் தாயாரிடம் கவலை கொள்ளாதீர்கள் ...நிச்சயம் இறைவன் இது விசயத்தில் நல்ல ஒரு மாற்றத்தை உருவாக்கி தருவான் என ஆறுதல் கூறினார்
மேலும் அங்கு கூடியிருந்த இளைஞர் கூட்டத்தைப் பார்த்து ..
எப்போதும் நாம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகமல் எந்த விசயத்தையும் அரசியல் ரீதியாக அனுகினால் நிச்சயம் சமுதாயம் நல்லதொரு பாதையை நோக்கி பயணிக்கும் என அறிவுறுத்தினார்..

நன்றி மதுரை அலி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.