மோடி குறித்து டாக்டர் ஜாகிர் நாயக் கூறியது என்ன ..??கடந்த சில நாட்களாக ஒரு செய்தி முகநூலில் பரவுகிறது.

அது என்னவெனில், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மோடியை புகழ்ந்துள்ளார். அவரை ஆதரிப்பதாக கூறியுள்ளார்; மோடி நல்லவர் என்று கூறியுள்ளார் என்று பதிவு (பதிவாகவும்/படத்திலும்) எழுதப்பட்டு, பரப்பப்பட்டு வருகிறது .. (பார்க்க படம்: 3 & 4)

உண்மையிலேயே டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் அப்படி கூறியிருந்தால் அது கண்டிப்பாக கண்டிக்கத்தக்கதே!! எதிர்க்கவேண்டியதே!!


சில முஸ்லிம்மல்லாதவர்கள் எவ்வாறு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் (எடிட் செய்யப்பட்ட) உரையின் சிறு பகுதியை (Out of Context) மட்டும் கேட்டு தவறாக எண்ணினார்களோ, அதே போன்ற தவறும் நாமும் செய்கிறோம்.

இதன் உண்மை நிலை தான் என்ன ...??

கீழ்கண்ட ஆங்கில வாசகத்தை கொண்ட செய்தி இணையத்தில் எடுக்கப்பட்ட Screenshot. (பார்க்க படம்:2)

அந்த படத்திலிருக்கும் கருத்துக்களை மொழிப்பெயர்த்து பரப்பி வருவதோ பிழையுள்ள மொழிப்பெயர்ப்பு.

ஆங்கிலத்தில் உள்ளவையும் அதன் சரியான மொழிபெயர்ப்பையும் அதற்கு கீழாகவே தனிதனியாக கொடுத்துள்ளோம்.

What are your views on Narendra Modi? நரேந்திர மோடி குறித்து உங்கள் கருத்து(/பார்வை) என்ன ..??


Modi is the only prime minister of India who has visited so many Muslim countries in just two years. இரண்டு ஆண்டில் பல முஸ்லிம் நாடுகளுக்கு சென்று வந்த ஒரே இந்திய பிரதமர்.

This will strengthen relations between India and other Muslim countries. இதனால் (ஒரு பிரதமர் பிற நாடுகளுக்கு சென்று வருவதன் மூலம்) இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் உள்ள உறவு வலுக்கும்.

It will strengthen relationship of Hindus and Muslims too. (இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவையும் வலுப்படுத்தும்)

‪‎If‬ his intention is to maintain unity between Hindus and Muslims and between India and other Muslim countries, i am totally for him ‪#‎ஒருவேளை‬ இந்து முஸ்லிம் ஒற்றுமை மேம்படுத்துவது தான் அவரின் (‪#‎உண்மை‬) நோக்கமாக ‪#‎இருந்தால்‬ (If) நான் அவரோடு இருக்கின்றேன்.

மோடியுடைய நோக்கம் இது தான் என்றோ, நான் முழுவதுமாக அவருக்கு துணைபோகிறேன் என்றோ அவர் சொல்லவில்லை.

அவ்வாறு சொன்னது போல் காட்டும் வகையிலேயே தான் அவ்வாறு திரித்து மொழிப்பெயர்த்துள்ளார்கள்;

இதையும் கண்மூடித்தனமாக நாம் பகிர்ந்து திட்டி வருகிறோம்

மாறாக, அவர் சொன்னது, "அவருடைய எண்ணம் (Intention) அவ்வாறு இருந்தால்" என்பது போல் தான் பேசியுள்ளார். இங்கு உறுதிப்பட எவ்விசயத்தையும் சொல்லவில்லை.

"ஒரு நாட்டின் பிரதமர் பிற நாடுகளுக்கு செல்வதன் மூலம், நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்படும்; மக்களுக்குள்ளேயும் உறவுகள் வலுப்பெறும்" என்ற கருத்தை சொல்லிவிட்டு, "ஒருவேளை இதற்காக (அதாவது மக்களின் இணக்கத்திற்காக) உண்மையிலேயே அவர் பாடுபடுபவராக இருந்தால் , நான் முழுக்க அவருடன் " என்று கூறியுள்ளார்.

ஆக, மோடியை அப்படியே ஆதரிக்கிறேன் என்றோ, மோடி மக்களின் இணக்கத்திற்காக (இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக) பாடுபடுகிறார் என்றோ அவர் சொல்லவேயில்லை. (இதற்கு மாற்றமாக எவ்வாறு பதிந்துள்ளார்கள் என்று பாருங்கள்; பார்க்க படம் :3)

மோடி ஜி மிகவும் நல்லவர் என்று சொன்னதாக, மூன்றாவது படத்தில் பதிந்திள்ளார்களே...??

இதற்கு எவராலும் ஆதாரத்தை காட்ட முடியுமா..??

ஜாகிர் நாயக்கை வெறுப்பவர்கள் தான் இவ்வாறான செயலில் ஈடுபட்டிருப்பார்களோ என்று தான் நினைக்க தோன்றுகிறது.

முகநூலில் இது குறித்து சில சகோதரர்கள் பதிவிட்டதையும் (கூடுதல்/ வித்தியசமான) புரிதல்களுக்காக இங்கு பதிவிடுகிறேன்.

Thahleel alislam : சில இக்கட்டான சூழலில் ஹிக்மத்தை பிரயோகப்படுத்த வேண்டியுள்ளது இது போன்ற நாடுகளில் வாழும் போது மட்டும் . இதன் காரணமாக பலன்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில்

MI Sahir : இது போன்ற அறிக்கைகள் திட்டமிட்ட பாதகமான விளைவுகளை தடுக்குமென்றிருந்தால் அதுவும் ராஜதந்திரமே....

Mohamed Ashik : அவர் சொல்வது உங்களுக்குமா புரியலை..?!

What are your views on Narendra Modi?

Modi is the only prime minister of India who has visited so many Muslim countries in just two years. (செம 'ஊர்சுத்தி'ன்னு கிண்டல் பன்றார். இதை லூஸ்ல விட்டுருவோம்.)

This will strengthen relations between India and other Muslim countries. (இந்தியாவுக்கும் மத்த முஸ்லீம் நாடுகளுக்கும் உறவு வலுக்கும்)

It will strengthen relationship of Hindus and Muslims too. (இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கும் முஸ்லீம் நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவையும் வலுப்படுத்தும்)
.
If his intention is to maintain unity between Hindus and Muslims and between India and other Muslim countries, i am totally for him.(அவருடைய ஊர் சுத்துற நோக்கமும்.... மேலே நான் சொன்ன மாதிரித்தான் என்றால்... நான் முழுக்க அவருடன்.)

செமை ஆப்புன்னு புரியலையா..?!

அவர்தான் அப்படி எண்ணுபவரல்லர் என்று உலகுக்கே தெரியுமே..!

இன்னும் இந்தியா வந்தடைந்ததும் டாக்டர் ஜாகிர் நாயக் குறிப்பிட்ட பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார் என்ற வாசகமும் (ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பதியப்பட்ட) பதிவில் இருந்தது.

முதலில் ஜாகிர் நாயக் இன்னும் இந்தியாவிற்கு இன்னும் வரவேயில்லை என்பதே உண்மை.
.
இது ஒரு பக்கமிருக்க, இந்த செய்தியின் நம்பகத்தன்மையும் ஒரு கேள்விக்குறியே!!!

டாக்டர் ஜாகிர் நாயக் விசயத்தில் இந்திய ஊடகங்கள் தங்களது சுயரூபத்தை முழுவதுமாக வெளிக்காட்டியது;

டாக்டர் ஜாகிர் நாயக்கை நச்சு செடி என்றது தினமணி;

நைஜிரியாவில் (அரசு நியமித்த) பாதுகாப்பு அதிகாரிகளுடன் அரங்கத்திற்கு டாக்டர் ஜாகிர் நாயக் செல்லும் காட்சியை, ஏதோ தீவிரவாதி கூட்டாளிகளுடன் செல்வதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி "சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர், ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும் என்று சொன்னவர்" என்று சொல்லி தமிழ் ஊடகங்கள் அறிமுகப்படுத்தியது;
.
வடஇந்தியாவின் ஊடகங்களோ இவற்றிற்கு ஒரு படிமேல் சென்று, அவர் தீவிரவாதி/பயங்கரவாதி; பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர் என்பது போன்ற விஷகருத்துகளை மக்கள் மனதில் திணித்தனர்.

இவ்வாறெல்லாம் ஏன் செய்கிறார்கள்..??

இவரது பிரச்சாரத்தை முடக்கவும்; அவப்பெயர் சுமத்தி மக்களிடத்திலிருந்து ஓரங்கட்டிட தான்;

இப்போது இந்த செய்தியை கொண்டு, முஸ்லிம்களாலும் ஒரங்கட்ட வைக்கும் முயற்சியே இது;

இதன் முதற்கட்டமாக தான் சில வருடம் முந்தைய தியோபந்த் ஃபத்வா'வை (3வாரம் முன்பு ஊடகங்கள்) கையிலெடுத்தார்கள்.முஸ்லிம்களும் இவரை எதிர்க்கின்றனர் என்பது போல சித்தரித்தார்கள்;

இதற்கு தியோபந்த் கண்டித்தது; அல்ஹம்துல்லில்லாஹ்!! இது அவர்களின் முதிர்ச்சியை காட்டுகிறது. நாமும் இந்த மீடியாவின் (ஏமாற்று) வலையில் வீழ்ந்துவிட வேண்டாம்.

ஒருவேளை நாம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் உரைகளை (முழுமையாக) கேட்காமல் இருந்திருந்தால், மீடியா போட்டு காட்டும் சில காட்சிகளை பார்த்து அவ்வாறே நம்பியிருப்போம்;

ஆக, நாம் அறிந்திருந்தமையால், மீடியாவின் பொய்களையும், புழுகுமூட்டைகளையும், அள்ளிவீசிய அவதூறுகளை கண்கூடாக பார்த்தோம்.
.
ஆக, தெளிவான ஆதாரம் வராதவரை நாம் எந்த முடிவுக்கு செல்ல வேண்டாம்.

பொறுமை காப்போம்; உண்மையிலேயே (பரப்பப்படும் செய்தி) அவ்வாறு கூறியதாக முழு வீடியோ வெளிவந்தால் கண்டிப்பாக, அது கண்டனத்திற்குரியதே!!!

அதுவரை பொறுமை காப்போம்.

.இன்னும், "தீவிரவாதம், முஸ்லிம்களின் தனி உடைமையா..?" என்ற தலைப்பில் பேசிய உரையில் பேசுகையில், குஜராத் படுகொலை முதல் அமெரிக்காவின் 9/11 வரை எங்கு சென்றாலும் அனைத்திலும் அரசின் உள்வேலையே (Inside Job) என்பதனை விரிவாக விளக்கிவிட்டு, இறுதியாக, "தீவிரவாதம் அரசியல்வாதிகளின் தனி உடைமையே!!" என்று உரையை முடித்தார் என்பது குறிப்பிடதக்கது.

- ஓர் இஸ்லாமிய அழைப்பு

ஓர் இஸ்லாமிய அழைப்பு's post.

நன்றி: Mohamed Ali Jinnah
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.